குழந்தைகள் விரும்பி உண்ணும் மொரு மொரு தக்காளி அடை!!..

0
135

தேவையான பொருட்கள்

தக்காளி-   6
இட்லி அரிசி-    1/4 கிலோ
மிளகாய் வற்றல்-    4
இஞ்சி     –    சிறிதளவு

கறிவேப்பிலை-    சிறிதளவு

கொத்தமல்லி இலை-சிறிதளவு

கடலை பருப்பு-தேவைக்கேற்ப

துவரம் பருப்பு-தேவைக்கேற்ப

வெங்காயம் நறுக்கப்பட்டது – சிறிதளவு

 

 

செய்முறை

  • இட்லி அரிசியை ஊற வைத்து இஞ்சி,கடலை பருப்பு,துவரம் பருப்பு மிளகாய் வற்றல், தக்காளி சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும்.
  • கறிவேப்பிலை,வெங்காயம் தாளித்து மாவில் போடவும்.
  • கொத்தமல்லி இலைகளையும் போட்டு கிண்டவும்..
  • பின் உப்பு சேர்த்து கலந்து அடைகளாக வார்க்கவும். அடையை சுற்றிலும் எண்ணெயை தூவி விட்டு, பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். பின் திருப்பி போட்டு வேக விடவும்.
  • மணமணக்கும் சுவையில் தக்காளி அடை ரெடி.
  • தேங்காய் சட்டினி வைத்து சாப்பிடலாம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here