உலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…

0
89

இந்த வருட உலககோப்பை தொடர் இந்திய அணிக்கு நன்றாக தொடங்கியது அதன் பிறகு சில தடங்கல்கள் ஏற்பட்டதால் இந்திய அணியில் சற்று தடுமாற்றம் காணப்படுகிறது. தற்போது மீண்டும் ஒரு தடங்கல்.

தடங்கல் என்று கூறப்படுவன எல்லாம் தவான் காயம் காரணமாக உலககோப்பை தொடரில் இருந்து விலகல், தற்போது விஜய் ஷங்கர் காயம் காரணமாக உலககோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போது முதன்முறையாக விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, 15 ரன்கள் எடுத்தார்.            அதன்பிறகு ஆப்கானிஸ்தானுடன் நடந்த போட்டியில் அவருக்கு பந்து வீசும் வாய்ப்பு அளிக்கப் படவில்லை. அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுடன் விளையாடும்போதும் விஜய் சங்கர் பந்து வீசவில்லை.

அவர் போட்டியில் ரன்கள் ஒன்றும் பெரிதாக அடிக்கவில்லை. இந்த நிலையில் விஜய் சங்கருக்கு பயிற்சியின்போது காலில் காயம் ஏற்பட்டதாள் தற்போது உலககோப்பையில் இருந்தே விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஷங்கர் வலைப்பயிற்சியின் போது வேக பந்துவீச்சாளர் பும்ரா வீசிய பந்து காலில்பட்டு காயமடைந்தார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்பிறகு அவர் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.

இளம் வீரர் ரிஷப் பன்ட் இங்கிலாந்துக்கு எதிராக அணியில் சேர்க்கப் பட்டார். அந்த போட்டியில் சற்று நிதானமாக விளையாடிய பன்ட் பந்துகளை வேஸ்ட் செய்யாமல் நன்றாகத்தான் விளையாடினார்.

விஜய் ஷங்கர் தற்போது உலககோப்பையில் இருந்து விலக்கப்பட்டுள்ளது காயம் காரணமாகவா அல்லது அவர் சரியாக விளையாடாததால் தானா என்று சர்ச்சைக்குரிய தகவல் வந்துகொண்டிருக்கின்றன.

இந்தநேரத்தில் தற்போது விஜய்ஷங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த விசயமமும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த மயங்க் அகர்வால் ஒரு முறைகூட சர்வதேச அளவிலான போட்டியில் விளையாடாத ஒரு கிரிக்கெட்டர். அவரை ஏன் தற்போது அணியில் எடுத்துள்ளார்கள் என்று பலருக்கும் பலவிதமாக சந்தேகங்கள் வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here