மொறு மொறுப்பான புதினா, மல்லி வடை…

0
229

என்னென்ன தேவை :

உளுந்தம்பருப்பு – 1/4 கிலோ
கடலைப்பருப்பு – 100 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்
பச்சை மிளகாய் – 3
புதினா – அரை கட்டு
மல்லித்தழை – அரை கட்டு
இஞ்சி – 1 துண்டு

 

எப்படிச் செய்வது :

  • முதலில் பருப்புகளை ஒன்றாக ஊற வைக்கவும்.
  • மல்லித்தழை, புதினாவை அலசி மிகவும் பொடியாக நறுக்கவும்.
  • ஊறிய பருப்புகளை தண்ணீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைக்கவும்.
  • இத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, அதில் நறுக்கிய புதினா, மல்லித்தழை, உப்பு, சேர்த்து நன்கு பிசையவும்.
  • பின் வடைகளாக தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.
  • மணம், சுவையுடன் மொறுமொறு புதினா, மல்லி வடை ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here