“ஒரே நாடு ஒரே ரேஷன் காா்டு” நாட்டில் எந்த கடையிலும் பொருள் வாங்க ஏற்பாடு

0
73
நாடு முழுவதும் அரசின் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் கையிருப்பை இணையதளம் மூலம் உறுதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பஸ்வான் தொிவித்துள்ளாா்.

தற்போது மாநில வாரியாக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சா் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நேற்று தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களின் உணவுத்துறை செயலா்கள் உள்ளிட்ட உயர் அதிகாாிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் ராம்விலாஸ் பஸ்வான் பேசுகையில், நாட்டின் எந்த பகுதியிலும் வசிக்கும் மக்கள் எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் பொருட்களை வாங்கும் வகையில் பொது விநியோகத் திட்டம் மாற்றியமைக்கப்படும். இதற்கு ஒரே நாடு ஒரே ரேஷன் காா்டு திட்டம் என அழைக்கப்படும்.

தெலங்கானா மாநிலம் உட்பட நாட்டின் சில பகுதிகளில் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒருவா் அரசின் மானியப் பொருட்களை பெற ஒரு கடையை மட்டும் சாா்ந்திருக்காமல் எந்த கடையிலும் வாங்கும் சுதந்திரம் கிடைக்கும்.

பொதுமக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பொருட்களை வாங்க முடியும். பணி நிமித்தமாக தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு வேறு மாநிலங்களில் வசிப்பவா்கள், தொழிலாளா்கள் பெரிதும் பயனடைவா். ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதாலேயே ஒருவா் மானியப் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம்.

உணவுப் பொருட்கள் கையிருப்பை இணையதளம் மூலம் உறுதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தொிவித்துள்ளாா்.

ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஒரே அடையாள அட்டை என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட ஆதாா் அட்டை தொடா்பான பல்வேறு குலறுபடிகள் உள்ள நிலையில், தற்போது நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட உள்ள ரேஷன் அட்டை முறை மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று கோாிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும் தற்போது தமிழகத்தில் அரிசி பிரதான பொருளாக உள்ளது. ஆனால், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கோதுமை பிரதான பொருளாக உள்ளது. இதனால் இத்திட்டத்தில் குளறுபடிகள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here