குழந்தைகள் விரும்பி உண்ணும் மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி…

0
78

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு –   1/2 கிலோ
கேரட் துருவல் –   1 கப்
முள்ளங்கி துருவல்  –  1 கப்
புதினா  –  அரை கைப்பிடி
மல்லி  –  அரை கைப்பிடி
வெங்காயத்தாள்  –  1 கப்
எண்ணெய்   – 4 ஸ்பூன்
உப்பு  –  தேவையான அளவு

செய்முறை:

  • கோதுமை மாவில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
  • முள்ளங்கி துருவல், கேரட் துருவல், வெங்காயத்தாள், பொடியாக நறுக்கிய புதினா, மல்லி எல்லாம் சேர்த்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும்.
  • அதில் சிறிது தண்ணீர் விட்டு பிசையவும்.
  • தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்திகளாக போட்டு எண்ணையை தூவி எடுக்கவும்.
  • சத்தான காலை டிபனாக செஞ்சு அசத்தலாம்… குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள்..டிரை பண்ணி பாருங்க…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here