ஆரோக்கியம் அளிக்கும் ஃப்ரூட்ஸ் நட்ஸ் ஓட்ஸ் பொங்கல்..

0
81

என்னென்ன தேவை?

ஓட்ஸ் – 1/2 கப்,
வேகவைத்த பாசிப்பருப்பு – 1/4 கப்,
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
பொடித்த பாதி ஆப்பிள் துண்டுகள்,
சிறு துண்டுகளாக நறுக்கிய பைனாப்பிள் – 2 துண்டுகள்,
விருப்பமான நறுக்கிய பழங்கள் கலந்தது – 1 கப், பாதாம்,
பிஸ்தா, வால்நட்ஸ் – தலா 3,
பால் – 1 கப்,
தேன் – 1/4 கப்.

  • எப்படிச் செய்வது?
  • வெறும் கடாயில் ஓட்ஸை வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதே கடாயில் நட்ஸை வறுத்து உடைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவிடவும்.
  • பின்பு வெந்த பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
  • சிறிது ஆறியதும் பழத்துண்டுகள், பாதி நட்ஸ் கலவை, தேன் சேர்த்து கலந்து மீதியுள்ள நட்ஸை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
  • சுவையான ஓட்ஸ் பொங்கல் ரெடி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here