சயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…! எந்த நாட்டுக்கு தெரியுமா?

0
585
ஆர்யா – சயீஷா தங்களின் ஹனிமூனை கொண்டாட அசர்பைஜானிற்கு பயணித்துள்ளனர். அசர்பைஜான் என்பது ஆசிய கண்டத்திற்குள் ஐரோப்ப கண்டத்திற்குள் இடையில் இருக்கும் முன்னர் சோவியத் யூனினில் இருந்த ஒரு நாடு…

நடிகர் ஆர்யா தனியார் தொலைக்காட்சியில் தான் திருமணம் செய்ய பெண் தேடிவிட்டு அதில் யாரையுமே தேர்வு செய்யாமல் சென்ற விஷயம் எல்லாம் நமக்கு தெரியும். அதன் பிறகு அவரும் அவருடன் கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த சயீஷாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதன் பின் இருவரும் சில மாதங்களில் தங்கள் காதலை அறிவித்து தாங்கள் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

ஆர்யாவும் சயீஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் அவர்களை பிரபலபடுத்தியுள்ளது. இவர்களது திருமணத்திற்கு பின்னர் இவர்களின் ஒவ்வொரு அசைவும் வைரலாகி வருகிறது

இந்நிலையில் ஆர்யா – சயீஷா தங்களின் ஹனிமூனை கொண்டாட அசர்பைஜானிற்கு பயணித்துள்ளனர். அசர்பைஜான் என்பது ஆசிய கண்டத்திற்குள் ஐரோப்ப கண்டத்திற்குள் இடையில் இருக்கும் முன்னர் சோவியத் யூனினில் இருந்த ஒரு நாடு

அந்த நாடு திருமணமான புதுமண தம்பதிகள் செல்லும் ஹனிமூன் சுற்றுலாவிற்காக பிரபலமான நாடு. இந்த நாட்டின் தலைநகர் பாகுவில் இருந்து ஆர்யாவும் சயீஷாவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சயீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here