அவரெல்லாம் ஒரு ஆளே இல்லை… பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு தமிழிசை விளக்கம்…

0
67

தமிழகத்தில் சர்ச்சைக்கு ஒரு அளவே இல்லை. அதுபாட்டுக்கு ஏதாவது ஒரு சர்ச்சை வந்துக்கிட்டுதான் இருக்கும். தற்போது பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் பற்றி கூறியது தவறு என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.

அவர் அப்படி என்னதான் கூறினார், அது என்ன பிரச்சனையை என்று பார்ப்போம். கடந்த 5ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ராஜராஜ சோழன் பற்றி ஒரு விஷயம் கூறினார்.

ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் ரஞ்சித் கூறிய கருத்து தவறு, அவர் பேச்சை பேச்சாகவே எடுத்துக்கொள்ள முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.               திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல.

அதோடு நிறுத்திவிடாமல் அவர் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம் என்று கூறினார். தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான் என்றும் கூறினார்.

ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம். சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் தான் என்று கடுமையாக கூறினார்.

மேலும் மங்களவிலாஸ் என வைத்து கொண்டு 400 பெண்களை விலைமாதர்களாக மாற்றி மிகப்பெரிய அயோக்கியத்தனம் செய்தார்கள் என்றும் பேசினார் பா.ரஞ்சித்.

இயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர் அங்கு இருக்கும் மக்களுக்கு ஆதரவாக பேசும் வகையில் பேசியுள்ளார்.

பா. ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர், தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் புகார் அளித்தனர்.

ரஞ்சித்தின் பேச்சை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் ரஞ்சித் கூறிய கருத்து தவறு, அவர் பேச்சை பேச்சாகவே எடுத்துக்கொள்ள முடியாது என்றுள்ளார்.

அவர் கூறியது உண்மையா அல்லது பொய்யா என்பது நமக்கு தெரியவில்லை. ஆனால் அவர் தற்போது இப்படி கூறியது சர்ச்சையை கிளப்பியது என்பது தான் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here