அதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடியாராம்…. புதிதாக பதவியேற்கவுள்ளாராம்… வெடிக்கிறது சர்ச்சை…

0
61

ஏற்கனவே அதிமுகவிற்கு இரட்டை தலைமை வேண்டாம் ஒற்றை தலைமைதான் வேண்டும் என்ற சில குமுறல்கள் இருக்கின்றன. இந்த நிலையில் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

சிலர் எடப்பாடிக்கு தான் ஆதரவு அதிகமாக உள்ளது என்கிற மாதிரி பேசுகின்றனர். சிலர் ஓ.பி.எஸ்.க்கு தான் ஆதரவு அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் திமுக தான் அடுத்து என்றும் குரல்கள் எழுகின்றன.

தற்போது வந்துள்ள சர்ச்சை என்னெவென்று பாருங்கள். பிரச்சனை போஸ்டர் ரூபத்திலேயே வந்துள்ளது. ஏற்கனவே ஒற்றை தலைமை தேவை என்று ராஜன் செல்லப்பா கூறியிருந்தார்.              ராஜன் செல்லப்பா யார் அந்த தலைவர் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் போனதால் அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் நீடித்து வருகிறது. ராஜன் செல்லப்பா எடப்பாடியாரின் ஆதரவாளர்கள் என்று பேச்சு அடிபடுகிறது.

அவர் பேசியது குறித்து நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்ல கூடாது என்பதையும் மீறி திருப்பரங்குன்றத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் முதல் சர்ச்சை கிளம்பியது.

அங்கு என்ன பிரச்சனையை வந்ததென்று நீங்களே பாருங்கள். இந்த கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும் அச்சிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையானது.

தற்போது பொதுச்செயலாளர் பதவியையும் எடப்பாடி பழனிசாமியே வகிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது.

இந்த கூட்டம் ஒற்றை தலைமை யார் என்பதை தீர்மானிக்கும் கூட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. புதிய சர்ச்சை, அதிமுக தலைமை கழகம் அருகே ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

அந்த போஸ்டரில் “பொதுச்செயலாளர் எடப்பாடியாரே வருக” என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது எடப்பாடியாரின் உள்குத்தாக கூட இருக்கலாம். ஆனால் இது சிறிய சர்ச்சையை மட்டும் தான் ஏற்படுத்தியது.

இது போன்ற விஷயங்கள் அரசியலில் சாதாரணம் என்று சிலர் இதனை உதாசினம் படுத்தி செல்வர். ஆனால் இந்த சர்ச்சை நாளை உண்மையாக கூட மாறலாம்..யாருக்கு தெரியும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here