மறைந்தார் மற்றுமொரு தலைவர்…. புதுவையின் முன்னாள் முதல்வர் காலமானார்….

0
62

நேற்று தான் கிரேசி மோகன் இறந்தார் என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்நிலையில் நேற்று தான் புதுவையின் முன்னாள் முதல்வரும் இறந்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.

புதுச்சேரியின் முன்னாள் முதலவர் ஆர்.வி.ஜானகிராமன் நேற்று காலையில் இறந்துள்ளார். அவருக்கு பல கட்சி தலைவர்களும் நேற்றிலிருந்து இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

ஆர்.வி.ஜானகிராமனின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவர் முன்னாள் முதல்வர் என்பதால் 21குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.              அவருடைய இறுதி சடங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோரும் மற்றும் பல தொண்டர்களும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

அவர் நேற்று காலை உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 78 தான் ஆகிறது. நேற்று காலை முதல் அவரது உடல் புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பொதுமக்களும், திமுக கூட்டணியினர் மற்றும் பலரும் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று காலை புதுச்சேரியில் இருந்து அவருடைய சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே பன்னீர் செல்வன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

அவருக்கு முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் ஆலத்தூருக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கு புதுச்சேரி போலீசார் அணிவகுப்புடன் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜானகிராமன் திமுக சார்பில் புதுச்சேரியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். அவர் புதுவையில் 1996-2000 வரை முதல்வராக பதவிவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here