நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தின் ரிலீசிற்கு தடை…. ரசிகர்கள் அதிர்ச்சி….

0
70

தமிழ் திரையுலகில் கலக்கி வரும் நயன்தார பல படங்களில் தனி நடிகையாக அதாவது ஹீரோ இல்லாமல் நடிகைக்கு மட்டும் என்ற படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் கொலையுதிர் காலம்.

கொலையுதிர்காலம் படம் தான் தர்போஹ்டு நயன்தாராவிற்கு ரிலீசாக இருக்கும் படம். இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று நீதி மன்றம் தடைவித்தித்துள்ளது.

நயன்தாரா இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சக்ரி டோலட்டி இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கொலையுதிர் காலம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.             மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையே கொலையுதிர் காலம் என்பது தன் தலைப்பு என்று கூறி பாலாஜி குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில் தான் படத்திற்கு வேறு தயாரிப்பாளர் வந்து எப்படியோ ரிலீஸ் வேலைகளை துவங்கினர். அந்த நேரத்தில் தான் பாலாஜி குமார் மூலம் இப்படி ஒரு பிரச்சனை வந்து நிற்கிறது.

நடிகர் ராதாரவி யன்தாராவை பற்றி விமர்சித்தது பெரும் பிரச்சனையாக மாறியது கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தான். அதை பார்த்த விக்னேஷ் சிவனோ, கை விடப்பட்ட படத்திற்கு எதற்காக ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடத்துகிறார்கள் என்றே புரியவில்லை என்று ட்விட்டரில் தெரிவித்தார்.

ஒருவழியாக ரிலீஸுக்கு தயாராகிவிட்டது என்று நினைத்துகொண்டிருக்கையில் தலைப்பு பிரச்சனையால் தடை வந்துள்ளது. பிரச்சனை தீர்ந்து படம் வருமா வராதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here