ட்ரம்ப் வேணும்னா தடை செய்யல்லாம்… நாங்க அதெல்லாம் செய்யமுடியாது என்று நிற்கும் அந்த 30 நாடுகள்…

0
67

அமெரிக்காவின் தற்போதைய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருக்கிறார். அவர் அதிபராக பதவியேற்றதில் இருந்து எதையாவது செய்துகொண்டு தான் இருக்கிறார். ஆனால் பலரையும் பகைத்துக்கொல்கிறார்.

முக்கியமாக சில வெளிநாடுகளுடன் அவருக்கு இருக்கும் தொடர்பு மிகமோசமான நிலையில் தான் இருக்கிறது. ஆனால் அவர் அதைபற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை.

அமெரிக்கா சீனாவிடையே நடந்து வரும் வர்த்த ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ஹீவாய் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.             அந்த நிறுவனம் தற்போது 30 நாடுகளுடடன் மொத்தம் 46 வர்த்தக ஒப்பந்தங்களை போட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தை அமெரிக்கா அதன் தேசிய பாதுகாப்பிற்காக தடைசெய்தார்.

ஆனால் அந்த நிறுவனத்தை மேலும் சில நாடுகள் நம்பிக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் தடைசெய்யப்பட நிறுவனத்துடன் சில நாடுகள் மீண்டும் ஒப்பந்தம் செய்கின்றனர்.

அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்தார்.

ஹூவாய் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா பிற நாடுகளில் உளவு பார்ப்பதாகவும், அமெரிக்காவும், அதனுடனான நட்பு நாடுகளும் குற்றம் சாட்டி வந்தனர்.

அப்படி சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், ஹீவாய் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் ஆராய்ச்சி வெளிவந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் டிரம்ப் ஹீவாயின் பொருட்களுக்கு தடை விதித்திருந்தார்.

தற்போது தான் அமெரிக்காவ இந்த நிறுவனத்திற்கு தடைசெய்தது இருந்த போதிலும், 30 நாடுகளில், 5ஜி தொடர்பான 46 வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளதாக ஹீவாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்னுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5ஜி சம்பந்தமான நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களை அமைக்க அனுமதி கொடுத்துள்ளனர்.

இந்த 5ஜி நெட்வொர்க் மூலம் 10 மடங்கு இருக்கும் இணையத்தின் வேகம் 100 மடங்காக அதிகரிக்கும் என்றும் ஹீவாய் நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு இந்த 5ஜி சேவையால் அதிவேகமான மொபைல் சேவையும், பாதுகாப்பான தகவல் தொழில் நுட்ப சேவையும் கிடைக்கும்.

தொலைத்தொடர்பு துறையில் சர்வதேச அளவில் சாம்சங், ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக முன்னிலை வகித்து வருவதும் அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை அதனால் தான் இதெல்லாம்.

இந்த தொலைத்தொடர்பு சேவை தற்போது தேவை தானா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனாலும் காலும் செல்லும் வேகத்திற்கு இது தேவை தான் என்று சிலர் கூறுகின்றனர்.

அமெரிக்க உண்மையில் பதுகாப்பிற்காகத்தான் ஹூவாய் நிறுவனத்தை தடைசெய்ததா அல்லது சீனாவின் மீதுள்ள கோபத்தால் தடைசெய்ததா என்ற குழப்பம் அனைவருக்கும் ஏற்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here