கிரிக்கெட் விளையாட்டிலிருந்து தனது ஓய்வினை அறிவித்தார் யுவராஜ் சிங்…. ரசிகர்கள் மிஸ் யு… யுவி.. என ட்விட்…

0
68

யுவராஜ் சிங் பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்ததே. அவருடைய விளையாட்டுக்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். 2011ல் இந்தியா உலககோப்பை வெற்றிபெற அவரும் ஒரு காரணம்.

அப்படி விளையாடிய யுவராஜ் தற்போது தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் இருந்து ஒய்வு கொடுத்துவிட்டார். அவருடைய ரசிகர்கள் அனைவரும் அவரை மிஸ் பண்ணுவதாக ட்விட் செய்து வருகின்றனர்.

யுவராஜ் சிங் என்று சொன்னால் அனைவருக்கும் நினைவுக்கு வரும் ஒரே விஷயம் ஆறு பாலில் ஆறு சிக்ஸர் அடித்தார் என்பது தான். இதுவரை இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.           யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆவார். அவர் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

           அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள், 58 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
           யுவராஜ் சிங் நேற்று செய்தியாளர்களை சந்தித்து திடீரென அவர் தனது ஓய்வை அறிவித்தார். மேலும் கிரிக்கெட் தனக்கு வாழ்வில் போராட கற்றுக்கொடுத்ததாகவும் உருக்கமாக பேசினார்.
           தற்போது அவருடைய ஓய்வுக்கு அவரது ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவருடைய அந்த ஒரு சாதனை யாராலும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.
           2007ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் போது, இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராடின் ஒரு ஓவரின் அனைத்து பந்துகளையும் சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார்.
            அந்த ஓவருக்கு முன்பு தான் அவர் இங்கிலாந்தின் ஒரு வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த கடுப்பில் இருந்த அவருக்கு அந்த பால் அனைத்தும் அந்த வீரர் போலவே தெரிந்தது போல அதான் அனைத்தையும் சிக்ஸருக்கு அனுப்பிவிட்டார்.
             அப்படி ஒரு அதிரடி காட்டி கிரிக்கெட் உலகையே மிரட்டியவர் யுவராஜ் சிங். இந்த சாதனையை மற்றவர்கள் இன்னும் முறியடிக்கவில்லை. அதாவது உலககோப்பை போட்டிகளில் யாரும் அடிக்கவில்லை.
              தற்போது அவருடைய ஒய்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் அவருடைய விளையாட்டை யாராலும் மறக்கமுடியாது என்று வருத்தத்துடன் தெரிவித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here