இலவச கட்டாயக்கல்வி திட்டத்திற்கான நீதி குறைக்கப்பட்டுள்ளது… ஏழை மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது…

0
71

இலவச கட்டாயகல்விக்காக தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கப்பட்டு வந்தத. அந்த நிதி மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்டது. தற்போது அது மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச கட்டாயகலவியானது தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதாகும். இதற்கான நிதி தற்போது தனியார் பள்ளிகளுக்கு குறைத்து கொடுக்கப்படுகிறது.

இதனால் அந்த பள்ளிகள் இடம் ஒதுக்கீடு செய்வதில் பல பிரச்சனைகள் ஏற்படும். தனியார் பள்ளிகளில் படித்து வரும் ஏழை எளிய மாணவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.                தமிழகத்தில், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்து வருகின்றனர்.

தனியார் பள்ளியைச் சுற்றி 2 கிலோ மீட்டர் தொலைவில் வசிப்பவர்கள் இந்த விதியின் கீழ் விண்ணப்பித்து, இடங்களை பெறமுடியும். ஒவ்வொரு பள்ளியிலும் 25 சதவீதம் மாணவ, மாணவியர் இலவச கட்டாய கல்வியில் சேர்க்கப்படுவர்.

இந்த விதிமுறைகள் அனைத்தும் தனியார் பள்ளிகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து, மாணவர்களைத் தேர்வு செய்தும் கொடுக்கின்றனர்.

2016-17 ஆம் கல்வியாண்டில் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.25,385 முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.33,431 வரை கட்டணம் நிர்ணயித்தார்.

தற்போது செயலாளராக உள்ள பிரதீப் யாதவ் இதுவரை இருந்த கட்டணத்திலிருந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் சுமார் 12,000 ரூபாய் வரை குறைத்துள்ளார் என்பது பிரச்சனையாக உள்ளது.

இந்த அறிக்கையில் ஒன்றாம் வகுப்புக்கான ரூ.11,719 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற வகுப்புகளுக்கும் 12,000 முதல் 12,500 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த குறைக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் தான் 2017-18ம் ஆண்டுக்கான கல்வி கட்டணமும், தனியார் பள்ளிகளுக்குச் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த குறைவான நிதியுதவியால் தனியார் பள்ளிகளில் கிடைக்கும் இடஒதுக்கீடு குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here