ஆளும் கட்சி என்ற ஒரு தகுதி தவிர வேறு எதுவுமே அதிமுகவுக்கு இல்லை… திவாகரன் அதிரடி பேட்டி…

0
76
          அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியின் தலைவரான திவாகரன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவில் இருந்தார். அதன்பின்பு தலைமையில் நம்பிக்கையில்லாமல் தனி கட்சி தொடங்கினார்.
           அவர் தற்போது அதிமுகவை பற்றி ஒரு விஷயம் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தினகரன் தலைமையில் இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் காணாமல் போய்விடும் என்று கூறியுள்ளார்.
            திவாகரன் தினகரனையும் ஒரு அரசியல் கோமாளி, ஒரு அழிவுச்சக்தி, ஒரு மூட்டை பூச்சி, அதான் மக்கள் நசுக்கி எறிந்து விட்டனர் என்று வாய்ய்க்கு வந்த படி விமர்சித்துள்ளார்.             அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று ஏற்கனவே ராஜன் செல்லப்பா கூறியிருந்தார். அதற்கு திவாகரனும் ஆதரவளிக்கும் வகையில் அவர் கூறியது சரி தான் என்று கூறியுள்ளார்.
             திவாகரன் ஆரம்பித்த அண்ணா திராவிடர் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மன்னார்குடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி கொடியை ஏற்றி வைத்து திவாகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
             அவருடைய அண்ணா திராவிட கழகம் மத்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். தற்போது அவர் கட்சியின் சார்பாக செயல்பட துவங்கவுள்ளாறாம்.
             மேலும் அவர் கூறுகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதித்தல், எட்டு வழிச்சாலை திட்டம் போன்றவற்றின் ஆபத்து, அபாயத்தை உணராமல் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.
             ஜெயலலிதா மறைந்தா போதே அதிமுகவுக்கு நெருக்கடி தொடங்கி விட்டது.  எப்படி இருந்தாலும் இது அதிமுகவுக்கு இறங்குமுகம்தான். தினகரன் ஒரு அரசியல் கோமாளி என்றும் கூறியுள்ளார்.
             ஒவ்வொருவரும் வேறு வேறு கட்சிகளுக்கு செல்ல காரணமே தினகரன்தான். ஒரு மூட்டை பூச்சி. அதனால்தான் மக்கள் அவரை நசுக்கி எறிந்து விட்டனர் என்று அதிரடியாக பேசினார் திவாகரன்.
             திவாகரன் பேசுவது எல்லாமே கிட்டத்தட்ட உண்மையாகவே இருக்கிறது. ஆனாலும் திவாகரன் எல்லாம் ஒரு ஆளு என்று சிலர் நினைத்து அவர் பேசுவதை உதாசினம் படுத்திவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here