நடிகர் சசிகுமார் மும்பையில் ஓட ஓட விரட்டி சண்டையிட்டுள்ளார்… என்ன நடந்தது தெரியுமா?

0
68

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் இருக்கும் சசிகுமார் பலபடங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது அடுத்தடுத்து வெவ்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இடையில் எப்போதாவது அவர் சில படங்களை இயக்குவதும் உண்டு. தற்போது அவர் மும்பையில் சிலரை தெருவில் ஓட ஓட விரட்டி அடித்ததாகவும், போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏன் சசிகுமார் அவர்களை துரத்தி துரத்தி அடிக்க வேண்டும்? அதனால் என்ன நடந்தது என்னவென்று தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆரவமாக இருக்கும். அப்படி என்னதான் நடந்தது என்று பாருங்கள்.             இயக்குனர் நிர்மல் குமார் தான் தற்போது சசிகுமார், சரத்குமார் உள்ளிட்டோரை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். தற்போது படப்பிடிப்பு மும்பையில் நடந்து கொண்டிருக்கிறது.

சசிகுமார் நடிக்கும் இந்த படத்திற்கு இதுவரை பெயர் வைக்கப்படவில்லை. நிர்மல் குமார் கூறியதுபடி சசிகுமார் கெட்டவர்களை நடுரோட்டில் துரத்தி, துரத்தி அடித்து துவைத்துள்ளார்.

அதை பார்த்த பொது மக்கள் ஷூட்டிங் என்று தெரியாமல் யாரோ ஒரு ஆள் பலரை அடிக்கிறார் என்று மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் சசிகுமாரை அடையாளம் கண்டுபிடித்துவிட்டனர். பெரியவர்கள் முதல் குட்டீஸ் வரை பலரும் சசிகுமாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

பொதுவாக இந்தமாதிரி சூழ்நிலையில் மற்றவர்கள் கோபப்படுவர், ஆனால் சசிகுமார் கோபப்படாமல், முகம் சுளிக்காமல் பொறுமையாக ரசிகர்களுடன் சேர்ந்து செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார்.

சிகுமார் தனது நண்பர் சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

விளையாட்டு மற்றும் அரசியல் த்ரில்லராக உருவாகி வரும் கென்னடி கிளப் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here