திரைப்பட வசன கர்தா கிரேசி மோகன் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்… திரையுலகம் இரங்கல் தெரிவித்துவருகிறது…

0
60

கிரேசி மோகன் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவர் பல படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். அவருடைய காமெடிகளும் மிக சிறப்பாக இருந்தன.

இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்துள்ளது. அதனால் திரையுலகினர் அனைவரும் அவருக்காக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரை நிச்சயம் தமிழ் திரையுலகம் மறக்காது.

கிரேசி மோகன் புகழ்பெற்ற திரைப்பட வசன கர்தாதாவாகவும், நகைச்சுவை நடிகருமாக இருந்தார். அவருக்கு தற்போது வயது 66தான் ஆகிறது.ஆனால் திடீர் மாரடைப்பால் உயிர் பிரிந்துவிட்டது.           மோகன் தனது சிரிப்பூட்டும் பஞ்ச் வசனங்களால் பல கோடி ரசிகர்களை ஈட்டியவர். வார்த்தைகளை சிலேடையாக பயன்படுத்தி பல பொருட்களை கொண்டு வந்துவிடுவார்.

இப்படிபட்ட சிறப்புகள் இருப்பதால் இவரது வசனங்களை எளிதாக இனம் கண்டுவிட முடியும். அவ்வளவு தனித்துவம் இவரது வசனங்களில் இருக்கும். இந்த  கிரேசி மோகன், மறைவுக்கு தமிழ் சமூக வலைத்தளவாசிகள் தங்களது அஞ்சலிகளை செலுத்தி வருகிறார்கள்.

அனைவரையும் கலாய்ப்பதையே தங்கள் வேலையாக கொண்டிருக்கும் இந்த நெட்டிசன் கிரேசி மோகனை மிஸ் செய்வதாக கூறி பதிவிட்டுள்ளனர். வசூல் ராஜா படத்தின் காமெடிகாட்சிகள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றன.

கிரேசி மோகன் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களை சிரிக்க வைத்தவர். அவரை அனைவருமே மிஸ் பண்ணுவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். கிரேசி மோகன் ஆன்மா அமைதியடைய  அனைவரும் வேண்டுகின்றனர்.

இவருடைய  நகைச்சுவைகள் அவர் நடித்தபடங்கள் மூலம் நாம் அறிந்திருப்போம் ஆனால் அதுமட்டுமில்லாமல் அவர் வசனம் எழுதிய பல படங்களில் மிகவும் அருமையாக இருக்கும்.

அப்படிப்பட்ட மோகன் தற்போது உயிரிழந்துவிட்டார் என்பது அனைவருக்கும் கொஞ்சம் வருத்தமான செய்தியாகத்தான் இருக்கும். அவருக்கு நம் அனைவருடைய அஞ்சலியை செலுத்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here