கோவில்களில் பார்க்கிங் கட்டணம் வாங்குவதற்கு அரசு அங்கீகாரம் பெறவேண்டும்… நீதிமன்றம் வைத்த ஆப்பு…

0
65

தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்களுக்கு ஒரு அளவே இல்லை என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டில் பல பிரபலமான கோவில்கள் இருக்கின்றன. இது அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆனால் இதில் என்ன முக்கியம் என்றால் சில கோவில்களில் பார்க்கிங் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தான் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சிலர் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதாக தகவல் வந்துள்ளது. அதனால் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.               இந்த தீர்ப்பில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், உரிய அரசு அங்கீகாரமன்றி பார்கிங் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் கோயில் நுழைவாயில்களில் அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே வாகனங்களை நிறுத்துவதற்கு, கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கினை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திலுள்ள பவானி அம்மன் கோயில் அறங்காவலர் தாக்கல் செய்திருந்தார். அதில் தங்கள் கோயிலுக்கு வெளியில் எவ்வித அனுமதியுமின்றி மாயாண்டி என்பவர் சட்டவிரோதமாக பார்கிங் கட்டணம் வசூலித்து வருவதாக புகார் கூறியிருந்தார்.

அரசு அனுமதியின்றி பார்கிங் கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று அதற்கான தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பில், அரசிடம் உரிய அனுமதியோ அங்கீகாரமோ பெறாமல் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில், சட்ட விரோதமாக நுழைவுக் கட்டணமோ அல்லது வாகனம் நிறுத்துமிட கட்டணமோ வசூலிக்க கூடாது.

இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் துறை அதிகாரிகளுக்கும் அடுத்த 30 நாட்களுக்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது அனுப்பப்படும் அறிக்கை கிடைத்தவுடன் விதி மீறி கட்டணம் வசூலித்த நபர்கள் மீது, சிவில் மற்றும் குற்றப் பிரிவுகளின் கீழ் காவல்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம் அந்த சுற்றுவட்டார மக்களின் நலனுக்காகவும், கோவில் மேம்பாட்டிற்காகவும் மட்டுமே செலவு செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தற்போது விதமுறை மீறி கட்டணம் வசூலிப்பவர்கள் அனைவரும் பதறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here