காஷ்மீரில் பலாத்காரம் செய்யப்பட 8 வயது சிறுமி ஆஸிபா வழக்கில் 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு…

0
66

கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஸிபா கற்பழித்து கொலை செய்யப்பட சம்பவம் இந்தியாவையே பரபரப்பில் ஆழ்த்தியது. ஆனால் இந்த வழக்கில் தற்போது தான் குற்றவாளிகள் யார் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் இந்தியாவில் இருந்த அனைவரும் அந்த மோசமான வேலையை செய்தவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தனர். ஆனால் ஆட்சியில் இருந்த பாஜக அவர்களுக்கு ஆதரவளித்தது.

பாஜகவின் முழு ஆதரவு அந்த கும்பலுக்கு இருந்தது என்று மக்கள் அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் எப்போதும் அவர்களே ஜெயிக்க மாட்டார்கள். அதனால் தற்போது குற்றவாளிகள் யார் என கண்டுபிடித்து விட்டனர்.         ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி காணாமல் போனார். ஒருவாரம் கழித்து சிதைந்த நிலையில் அவரது சடலம்தான் கிடைத்தது.

பிறகுதான் இந்துத்துவா வெறியர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அம்பலமானது. சிறுமியை கடத்திச் சென்ற கொடூரர்கள், கோவில் ஒன்றில் 4 நாட்களாக மறைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

அந்த காமக்கொடுரர்கள் அச்சிறுமிக்கு நினைவே திரும்பாத வகையில் மயக்க மருந்து கொடுத்து 4 நாட்களாக உணவும் தண்ணீரும் தராமலேயே இந்த கொடூர சம்பவத்தை கோவிலுக்குள் வைத்தே நிகழ்த்தி இருக்கின்றனர்.

வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இருக்க பூஜைகளை தொடர்ந்து செய்து கொண்டே இந்த செயலை நடத்தியிருந்தனர். பலாத்காரம் செய்த கையோடு தலையில் கல்லை போட்டு கொலையும் செய்துள்ளனர்.

இதனால் காமுகர்களான முதன்மை குற்றவாளி சஞ்ஜித் ராம் மற்றும் 4 போலீசார் என மொத்தம் 7 பேரை கைது செய்தது போலீஸ். இந்த சம்பவத்திற்கு அவர்கள் கூறிய பதில் மோசமாக இருந்தது.

அவர்கள் கூறியதாவது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்தததே அச்சமூகத்தினரை அச்சுறுத்துவதற்கு என வாக்குமூலமும் கொடுத்தனர்.

இன்று இவ்வழக்கில் பதான்கோட் நீதிபதி தேஜ்விந்தர் சிங் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் ஞ்சி ராம், ஆனந்த் தத்தா, பர்வேஷ்குமார், தீபக் கஜூரியா, சுரேந்தர் வர்மா, திலக் ராஜ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஷால் என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைவருமே இவர்களுக்கு மரண தண்டனை அதாவது தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றனர். நிச்சயம் அது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here