ஆஸ்திரேலிய அணியை புரட்டி எடுத்த இந்திய அணி… ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்…

0
61

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியை தட்டிச்சென்றது.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி டாசை வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். முதலில் இந்திய அணி மெதுவாக தொடங்கினர்.

ரோஹித், தவான் துவக்கமே மிகவும் சிறப்பாக இருந்தது. ரோஹித் சர்மா நிதானமாக ஆடினாலும், 57 ரன்கள் குவித்தார். தவான் தன் இயல்பான ஆட்டத்தை ஆடி 117 ரன்கள் எடுத்து அசத்தினர்.        அதன்பின் களம் இறங்கிய விராட் கோலி 82 ரன்கள் எடுத்து இந்தியாவின் ரன்களை ஏற்றிக்கொண்டே சென்றார். ஹர்திக் பண்டியாவுக்கு நான்காம் இடத்தில் பேட்டிங் கொடுத்தது மிகவும் சிறப்பாக இருந்தது.

ஹர்டிக் பாண்டியா 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து நன்றாக ஆடினார். தோனி கடைசி களமிறங்கி ஒரு அதிரடி ஆட்டம் ஆடினார். 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து சிறப்பித்தார் டோனி.

அடுத்து களம்இறங்கிய ராகுல் 3 பந்துகளில் 11 ரன்கள் தன்னுடைய வேலையை சரியாக செய்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 352 ரன்கள் எடுத்து பெரிய இலக்கை நிர்ணயித்தனர்.

ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் நிதானமாக ரன் சேர்த்தாலும், 13 ஓவர்கள் வரை விக்கெட் இழக்காமல் 60 ரன்கள் சேர்த்தனர் ஆரோன் பின்ச் – டேவிட் வார்னர். ஆனால், ரன் ஓடுவதில் இருவரும் சொதப்பினர்.

இரண்டாவது ரன்னிற்கு ஓடிய டேவிட் வார்னரால் ஆரோன் பின்ச் 36 ரன்களில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து விளையாடிய வார்னர் – ஸ்மித் கூட்டணி அமைத்தனர் சிறப்பாக இருந்தது.

ஆனால் விக்கெட்டுகள் சரியான நேரத்தில் விழுந்ததால் ஆஸ்திரேலியா சரியாக கடைசி பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 316 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலககோப்பை போட்டிகளில் இரண்டுக்கு இரண்டு வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here