அடுத்த வருடம் முதல் இந்தியாவில் பி.எஸ்.6 விதிமுறை வரப்போகுதாம்… அதுனால என்ன பிரச்சனை வருதுன்னு பாருங்க…

0
67

இந்தியாவில் தற்போது பி.எஸ்.4 விதிமுறைகள் தான் இருக்கிறது. இந்நிலையில் திடீரென அடுத்தவருடம் முதல் பி.எஸ்.6 அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல நன்மைகள் நிகழும்.

ஆனால் இந்த விதிமுறைகள் கொஞ்சம் நஷ்டத்தை தான் தரும். ஆனால் இந்த விதிமுறையால் சுற்றுசூழல் பாதிப்பு குறைக்கப்படும். மேலும் அதனால் பல நோய்களும் தடுக்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு செய்கின்ற ஒரு நல்ல காரியம் என்றால் இது தான். இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்துகொள்ள கீழே தொடர்ந்து படியுங்கள்.        சுத்தமான காற்று மாசுபாடு அடைவதற்கு வாகனங்களில் இருந்து வெளியாகும் புகைதான் காற்று மாசுபாட்டிற்கு மிக முக்கியமான காரணம். தற்போது இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதனால் காற்று மாசுபாடு மேலும் மேலும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.  வாகனங்களின் இன்ஜின் மற்றும் எரிபொருள் தயாரிப்பில் சில மாறுதல்களை செய்வதன் மூலம், புகையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

இந்த மாசு அதிகரிப்பதை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் பாரத் ஸ்டேஜ் (BS – Bharat Stage). இதைத்தான் சுருக்கமாக பிஎஸ் என கூறுகின்றனர். இந்தியாவில் தற்போது மிகவும் கடுமையான பிஎஸ் – 6 விதிகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன.

பிஎஸ்-5 மாசு உமிழ்வு விதிகளை தவிர்த்து விட்டு நேரடியாக பி.எஸ்.6க்கு சென்றுள்ளதுக்கு முக்கிய காரணம் காற்று மாசுபாடு பிரச்னை அளவுக்குமேல் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த விதிமுறைகள் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் அமலுக்கு வருகின்றன. எனவே அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும், வேகமாக அப்டேட் செய்து வருகின்றனர்.

பி.எஸ்.6 விதிமுறையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிகப்பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளன. பெட்ரோல் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்துவது எளிது.

ஆனால் சிறிய டீசல் இன்ஜின்களை அப்டேட் செய்வதுதான் சவாலான காரியமாக இருக்கும். சிறிய டீசல் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிகளுக்கு இணையாக மேம்படுத்த அதிக செலவு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்-6 விதிகளை அமல்படுத்துவதற்காக 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது” என்றார் பிரகாஷ் ஜவடேகர். இந்த சவாலை எதிர்கொள்ள நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என்றார்.

இதனால் சிறிது நஷ்டங்களும், பிரச்சனைகளும் ஏற்பட்டாலும் இந்த விதிமுறைகள் வருவதால் சுற்றுச்சூழல் கண்டிப்பாக பாதுகாக்கப்படும் என்பது தான் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here