நேற்று வெஸ்ட் இண்டீஸ் ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருந்தது ஆனா பினிஷிங் சரியில்ல….

0
68

உலககோப்பை தொடரில் நேற்று ஆஸ்திரேலியா அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின. இரண்டு அணிகளுமே தங்களது முதல் போட்டியை வெற்றி பெற்று தான் இருந்தனர்.

அந்த நேரத்தில் தங்களது வெற்றி பயணத்தை தொடரவேண்டும் என்ற மனநிலையில் இரண்டு அணிகளுமே இருந்தன. ஆனால் வெற்றி யாராவது ஒருவருக்குத்தானே கிடைக்கும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில்  பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி துவக்கத்திலேயே தடுமாறியது.துவக்க வீரர்கள் அனைவரும் தங்களது விக்கெட்டை விரைவில் இழந்தனர். ஆஸ்திரேலியா அணி முதல் பவர் ப்ளேவிலேயே நான்கு விக்கெட்டுக்களை இழந்து சொதப்பல் செய்தனர்.

முதல் 100 ரன்கள் அடிப்பதற்குள் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அதன்பின் ஸ்மித் மற்றும் நாதன் நைல் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி ஓரளவு ரன்களை எடுத்து வந்தனர்.

இறுதியில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நாதன் நைல் 92 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களும் எடுத்தார். ஆஸ்திரேலியா இறுதியில் சிறப்பாக விளையாடினர்.

இந்த இலக்கு வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எளிதான இலக்குதான். ஆனால் களம் இறங்கிய இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது.

முதலில் அதிரடியாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். போட்டியில் பல தவறான தீர்ப்புகள் நடுவரால் வழங்கப்பட்டது.

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியால் இறுதியில் 273 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகளை வென்றுள்ளனர். இன்று இலங்கை அணியும் பாகிஸ்தானும் மோதுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here