துவங்கி விட்டது தென்மேற்கு பருவமழை… நாளைமுதல் பலத்த மழை பெய்யும்… இந்திய வானிலை மையம் அறிவிப்பு…

0
106

ஏப்ரல்,மே மாதம் என்றாலே தென்னிந்திய மக்கள் அனைவரும் அலறுவார்கள். ஏனென்றால் அந்த நேரத்தில் தான் கோடைகாலம். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

ஆனால் தற்போது மக்கள் அனைவரும் சந்தோசமாக இருக்கும் நேரம் வந்துவிட்டது. ஏனென்றால் தற்போது தான் தென்மேற்கு பருவகாற்று துவங்கியுள்ளது. நாளைமுதல் மழை பெய்ய துவங்கும்.

கேரளாவில் நாளை பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழைதான், இந்தியாவின் நீண்ட கால நீடிக்கும் ஒரு பருவமழையாகும்.             இந்த பருவகாற்று வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். சில நேரங்களில் செப்டம்பர் மாதத்தை தாண்டியும் தென் மேற்கு பருவ மழை நீடிக்கும்.

தற்போதைய கொடைகாலத்தால் மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய நீராதாரம் அனைத்தும் வறண்ட நிலைகளில் இருக்கிறது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் போதுமான அளவுக்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களும் கடும் வறட்சியை சந்தித்து வருகின்றன.

ஒரு சில அணைகள் மிகக்குறைந்தளவு நீரை மட்டுமே இருப்பதால் தற்போதைக்கு நிலைமையை சமாளித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழையால் தண்ணீர் தட்டுப்பாடும் வெயிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள மாநிலத்தின் கடலோர மாவட்டம் மற்றும் பல பகுதிகளில் நாளை பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது அனைவருக்குமே சற்று மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த தென்மேற்கு பருவகாற்றின் தாக்கம் தமிழகத்திலும் ஓரளவு இருக்கும். இந்த பருவமழை தமிழகத்தில் இருக்கும் பல அணைகளின் நீராதாரமாக இருப்பதால் மக்கள் பெரிதும் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here