ஜம்முவில் மீண்டும் தீவிரவாதிகள் நடமாட்டம்… 4 தீவிரவாதிகள் சுட்டுகொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி…

0
66

காஷ்மீர் இந்தியாவின் எல்லை பகுதியாக இருக்கிறது. இந்த இடம் வருடம் முழுவதும் பணியுடன் இருக்கும். பார்ப்பதற்கே அழகாக இருக்கும். ஆனால் அந்த இடம் மிகவும் ஆபத்தானது.

இங்கு தான் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அந்த எல்லையில் இந்திய ராணுவம் எப்பொழுதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு தான் இருப்பார்கள்.

தற்போது அங்கு மீண்டும் தீவிரவாதிகளின் நடமாட்டம் காணப்படுகிறது. நேற்று நான்கு தீவிரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு சற்று பதட்டம் நிலவுகிறது.          ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லஸ்ஸிபோரா பகுதியில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் வனப்பகுதிக்குள் மறைந்து இருந்த தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர் தீவிரவாதிகளும் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளிடம் இருந்து 3 ஏகே – 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்பு படையினர் யாருக்கும் எதுவும் ஆகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாதிகள் எப்படி வந்தாலும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க இந்திய ராணுவம் இருக்கிறது என்று அவர்கள் ஒவ்வொரு முறையும் நிரூபிக்கின்றனர். பாதுகாப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here