அஜித் மீண்டும் பைக் ரேசிங் செய்யவுள்ளாராம்… ரசிகர்கள் பதறுகிறார்கள்… ஏன் என்று தெரியுமா?

0
74

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ரஜினி கமல் ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருக்கிறார். அவருடைய கடின உழைப்பிற்கு அளவே இல்லை என்று தான் சொல்லவேண்டும். அவர் தற்போது மீண்டும் பைக்ரேஸ் செய்யும் காட்சியில் நடிக்கவுள்ளாராம்.

தற்போது அஜித் ஒரு டப்பிங் படத்தில் நடித்துவருகிறார். அவர் இப்பொழுது நடித்து வரும் படம் அமிதாப் பச்சன் நடித்த pink என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

அவர் நடித்து வரும் படம் தான் நேர்கொண்ட பார்வை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார்.            ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன் உள்ளிட்டோர் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

இந்த படத்தை அடுத்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கிறார். அஜித் நடிக்கும் அடுத்த படம் எப்படி இருக்கும் என்று அதன் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கிறார். அதேபோல், தற்போது வெளிவரவுள்ள படத்தையும் அவர் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போனி கபூர் அஜித் பற்றி பேட்டி அளித்துள்ளார். ரேஸ் மற்றும் பிற விளையாட்டுகள் மீது அஜித்துக்கு இருக்கும் ஆர்வத்தை பார்த்து வியக்கிறேன் என்று போனி கபூர் கூறினார்.

நடிகர் அஜித்துக்கு வேகம் என்றால் பிடிக்கும். எங்களின் அடுத்த த்ரில்லர் படத்தில் வேகம் இருக்கும். அஜித்தின் நடிப்பில் இந்தியில் ஆக்ஷன் படத்தை தயாரிக்க ஆவலாக உள்ளேன் என்கிறார் போனி கபூர்.

அஜித்தின் அடுத்த படத்தில் ரேஸ் குறித்த காட்சிகள் இருக்கும் என்பது தல ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கும் என்றும் கூறினார். ஆனால் இது ரசிகர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்துகிறது.

அதற்கான காரணம் ரேஸ் காட்சிகளில் நடிகர் அஜித் டூப் போடாமல் நடிப்பார் என்பதுதான். ஏற்கனவே பலமுறை அடிபட்டு, அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட அவருக்கு முதுகு வலி ஏற்படும். இது ஒரு ரிஸ்கான ஒரு முடிவுதான்.

எது எப்படி இருந்தாலும் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்காக மீண்டும் ரிஸ்க் எடுத்து நடிக்க இருக்கிறார். ஆனால் அது அவருக்கு ஆபத்தாக முடிந்துவிடாமல் இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here