2019 உலககோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா… தென்ஆப்பிரிக்கா மூன்றாவது தோல்வி…

0
61

உலககோப்பை கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று தென்ஆப்பிரிக்கா அணியும், இந்திய அணியும் விளையாடினர். இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது.

இந்த போட்டியானது தென்ஆப்பிரிக்கா அணிக்கு 2019 உலககோப்பை தொடரில் மூன்றாவது போட்டியாகும். மேலும் இது தான் இந்திய அணிக்கு 2019 உலககோப்பை தொடரில் முதல் போட்டியாகும்.

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் படுதோல்வியடைந்த தென்ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் களம்இறங்கியது. இந்தியா தனது துவக்கத்தை நன்றாக துவங்கியது.            உலக கோப்பை தொடரின் 8வது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடை பெற்றது. போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், டுபிளெசிஸ் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணியும் மோதியது.

நடப்பு உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் டாசில் இந்தியா தோற்றது. அதன்படி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தனர் தென்ஆப்ரிக்கா.

50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 42 ரன்களும் கேப்டன் டுபிளெசிஸ் 38 ரன்களும் எடுத்து ரன்களை சேர்த்தனர்.

சஹல் அற்புதமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்தியா 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் ரோகித் சர்மா 122 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டியின் வெற்றி குறித்து பேசிய கோலி கூறியதாவது.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் முதல் போட்டியை விளையாடுகிறோம். இது சவாலான போட்டியாகத்தான் இருந்தது. நாங்கள் இந்த போட்டியில் சரியாக விளையாடி வெற்றி பெற்றுவிட்டோம் என்றார்.

அதேபோன்று பவுலிங்கில் பும்ராவின் பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்தது. அவர் பேட்ஸ்மேன்களை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருந்தார். 10 ஓவரில் 35 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

ஒட்டுமொத்த இந்திய அணியின் கூட்டு முயற்சியால் நேற்றைய போட்டியை எளிதாக வென்றுவிட்டனர். இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here