ஹெல்மட் இல்லாமல் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது… சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி?

0
65

தற்போது தமிழ்நாட்டில் ஹெல்மட் போடவில்லை என்றால் அபராதம் அல்லது வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று சட்டம் உள்ளது. ஆனால் அது முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை.

அதுமட்டுமில்லாமல் தற்போது இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருமே ஹெல்மட் அணியவேண்டும் என்பது சட்டமாக உள்ளது. அதேபோல் காரில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என்ற ஒரு அதிரடியான கேள்வியை கேட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.                மேலும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தடாலடியாக கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் விதி இருகிறது.

ஆனால் இந்த விதியை மக்களும், அரசும் முறையாக பின்பற்றுவதில்லை என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது.

நேற்று முன்தினம் இந்த வழக்கில் காவல் துறை போக்குவரத்து இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் தரவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிராத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து துறை இணை ஆணையர் சுதாகர் நேரில் ஆஜராகினார்.

அவருடன் சேர்த்து போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரி ஸ்ரீஅம்பீசும் ஆஜராகினார். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்பித்தனர்.

மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், அபாரதம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களில் ஒருவர் கூட ஹெல்மெட் அணிவதில்லையே என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் பல கேள்விகளை எழுப்பினர்.

பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் அமல்படுத்துவது போன்று ஏன் போக்குவரத்து விதிகளை ஏன் தமிழகத்தில் கடுமையா சட்டங்களை அமல்படுத்த முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

தற்போது ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு இருக்கும் அபராதம் 100 ரூபாய் மட்டுமே. இந்த அபராதத்தை அதிகரிப்பது தொடர்பான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தற்போது இந்த வழக்கை நீதிபதிகள் வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த அதிரடி கேள்விகள் ஏதேனும் அதிரடி சட்டத்தை கொண்டுவருவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here