தேனியில் வாலிபர் ஒருவர் கேட்டில் கட்டிவைத்து உயிருடன் எரித்து கொலை… பரபரப்பு சம்பவம்… போலீசார் விசாரணை…

0
65

தமிழ்நாட்டில் பல விதமான கொலைகள் மற்றும் தவறான சம்பவங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது. ஆனால் நேற்று நடைபெற்ற சம்பவமோ மிகவும் விநோதமாக இருக்கிறது.

தேனி மாவட்டத்தில் ஒரு வாலிபர் கதவில் கட்டிவைக்கப்பட்டு உயிருடன் எரித்து கொலைசெய்யப்பட்டுள்ளார். இதனால் தேனியில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

தேனி மாவட்டத்தில் நடந்த இந்த கொடூர கொலையானது போடியில் வைத்து தான் நடந்துள்ளது. அந்த வாலிபர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டுள்ளார் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.            இந்த கொலை சினிமா பட பாணியில் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது. அந்த வாலிபர் கேட்டில் கட்டி வைத்து உயிருடன் எரிக்கப்பட்டு படுகொலை சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்கான போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் முழுவதும் எரிந்த நிலையில் உடல் இருந்துள்ளது.

அந்த வாலிபர் யார்? அவர் ஏன் கொலைசெய்யப்படவேண்டும்? மேலும் அவரை கொலை செய்தவர்கள் யார்? என காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தேனி – மூணார் தேசிய நெடுஞ்சாலையில் போடிநாயக்கனூர் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அருகே அந்த வாலிபர் முழுவதும் உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

அந்த கழிவு நீர் மையத்தின் கேட்டில் அந்த வாலிபரை கட்டி வைத்து  பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தற்போதைய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

உருதெரியாமல் எரிக்கப்பட்டிருந்ததால் இறந்தவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. டிஎஸ்பி ஈஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அந்த வட்டாரத்தை சேர்ந்த போலீசார் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here