“சர்கார்” பர்ஸ்ட் லுக்கை காப்பி அடித்த சந்தானத்தின் “டகால்டி” படம்… எதுக்கு இந்த ஈயடிச்சான் காப்பி…

0
73

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் நடிகர் சந்தானமும் குறிப்பிடத்தக்க ஒருவராக இருக்கிறார். அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் எதாற்த்தமானவைகளாக இருக்கும்.

கடந்த சிலவருடங்களுக்கு முன்புவரை அவர் நகைச்சுவை நடிகராகவே நடித்துவந்தார். ஆனால் தீடிரென தான் தற்பொழுது ஹீரோவாக உருவெடுத்துள்ளதாக கூறியிருக்கிறார்.

அதனால் தற்போது அவர் நடிக்கும் படங்களில் கதாநாயகனாகவே நடித்து வருகிறார். ஏற்கனவே தில்லுக்கு துட்டு1, 2 மற்றும் வல்லவனுக்கு புல்லும் ஆய்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.               அவர் தற்போது நடித்துவரும் படம் தான் ‘டகால்டி’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்கார் படபோஸ்டர் போல இருக்கிறது.

விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் தயாரித்து நடித்துள்ள படத்திற்கு டகால்டி என்று பெயர் வைத்துள்ளனர். இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அவர் ஹீரோவானது மட்டும் அல்லாமல் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த விஜய் ஆனந்த் இயக்கத்தில் ‘டகால்டி’ படத்தில் நடித்துள்ளார்.

18 ரீல்ஸ் சவுத்ரியுடன் சேர்ந்து சந்தானம் தயாரித்துள்ள டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தாடி, மீசையுடன் கூலிங் கிளாஸ் அணிந்து தம்மடிப்பது போன்று சந்தானம் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.

ஆனால் இந்த டகால்டி போஸ்டரை பார்த்தால் சர்கார் போஸ்டர் போலவே இருக்கிறது. டகால்டி படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டகால்டி படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த டகால்டி படத்தை அடுத்து சந்தானம் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானத்தின் படவாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்வதனால் சிலர் பொறாமைப்படுகின்றனர். ஆனாலும் சிலர் அவரது உழைப்பினை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here