ராகுல் ப்ரீத்தி சிங் NGK படத்தில் நடித்ததற்கான காரணம் என்னவென்று தெரியுமா? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….

0
119

என்.ஜி.கே படத்தில் சூர்யாவும், நடிகை ப்ரீத்தி சிங்கும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு திருத்தணியில் 215 அடியில் கட் அவுட் வைத்து சூர்யா ரசிகர்கள் கொண்டாடிய செய்தி அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அந்த கட் அவுட்டை மாநகராட்சியினர் உடனடியாக எடுத்துவிட்டனர். அவ்வளவு பெரிய கட் அவுட் வைக்கும் அளவிற்கு என்.ஜி.கே படத்தில் எதுவும் இல்லை என்று சிலர் விமர்சனம் செய்துவருகின்றனர்.

என்.ஜி.கே. படத்தில் நடித்தது ஏன் என்ற காரணத்தை ராகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த என்.ஜி.கே.               இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸாகி ஓரளவு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராகுல் ப்ரீத் சிங் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார்.

என்.ஜி.கே. பற்றிய அனைத்தும் தனக்கு பிடித்திருந்தது என்றும்  செல்வராகவன் இயக்கத்தில் நடித்தால் நம் நடிப்புத் திறமை மேம்படும் என்று கேள்விப்பட்டேன் என்றும் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளதால் இந்த படத்தில் நடித்துள்ளாராம். அவருடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார் ராகுல் ப்ரீத்தி சிங்.

செல்வராகவன் இயக்கிய படங்களில் கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்கள் ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறினார்.

செய்யும் வேலையை இஷ்டப்பட்டு செய்யும் கார்த்தியும், சூர்யாவும் வித்தியாசமானவர்கள். இரண்டு பேருமே கடின உழைப்பாளிகள், தலைக்கனம் இல்லாதவர்கள் என்றார் ராகுல் ப்ரீத்தி.

தனக்கு தமிழை விட தெலுங்கு மொழி நன்றாகத் தெரியும் என்பதால் இந்நிலையில் தமிழ் வசனத்தை மனப்பாடம் செய்து பேசுவது சிறிது கடினமாக இருந்ததாகவும் கூறினார்.

மேலும் அவர் பாக்கெட் மணிக்காக தான் முதலில் நடிக்கத் துவங்யுள்ளதாகவும் கூறினார். இதையடுத்தே நடிகையாவது என்று முடிவு செய்தேன் என்றுள்ளார்.

சூர்யாவுடன் சேர்ந்து நடித்த பிறகும் மீண்டும் கார்த்தியுடன் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளார் ராகுல் ப்ரீத் சிங். அவரின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் ராகுல் ப்ரீத்தி சிங் தமிழில் பல படங்களில் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறினார். அவர் கூறியபடியே தமிழ் ரசிகர்களும் ஆசைப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here