ரமலான் பண்டிகை ஆரம்பமானது… சவுதியில் பிறை தெரிந்ததால் இன்றே ஆரம்பமானது ரமலான்…

0
71

இஸ்லாமியர்களுக்கு ஒரு முக்கிய திருவிழா என்றால் அது ரமலான் தான். அந்த பண்டிகையை கொண்டாடும் நாள் வந்துவிட்டது. இன்று சவுதியில் பிறை தெரிந்ததால் ரமலான் ஆரம்பமானது.

ரமலான் பண்டிகையை அவர்கள் குடும்பத்தினருடன் மிகவும் கோலாகலமாக கொண்டாடுவார்கள். ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரமலான் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டத்தில் தவ்ஹித் ஜமாஅத் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. தொழுகையுடன் ஆரம்பமானது.            ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகம். இந்த பட்ன்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடம் இன்று ஆரம்பமாகிவிட்டது.

ஈகையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை சவுதி உள்ளிட்ட நாடுகளில் நேற்று பிறை தெரிந்ததால் தொடர்ந்து குமரியிலும் இன்று கொண்டாடப்படுகிறது.

ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மிக உயர்வானதாகும். நோன்புடன் தொடங்கும் இந்த பண்டிகை நிறைவாக ரமலான் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

இன்று ரமலான் பண்டிகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்  கொண்டாடினர். இந்த பண்டிகையை அவர்கள் மிகவும் ஆரவத்துடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

ரமலான் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடலாக்குடி பகுதியில் அமைந்துள்ள பாவா காசிம் பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இன்று கொண்டாடப்பட்ட இந்த விழாவில் பெண்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு பண்டிகையை சிறப்பித்தனர்.

மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கு ஒருவர் ரமலான் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மற்ற இஸ்லாமியர்களும் பண்டிகையை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

ரமலான் பண்டிகைக்கு பல்வேறு கட்சியின் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் இஸ்லாமியர்களுக்கு தங்களது ரமலான் வாழ்த்துக்களை தெர்வித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here