நிபா வைரஸ் கேரளாவில் தங்கிவிட்டது…. வேகமாக பரவி வருகிறது… மத்திய அரசின் நடவடிக்கை என்ன?…

0
68

கேரளா என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. அப்படி இருக்கும் அந்த ஊரு. ஆனால் எல்லாருக்கும் பிடிக்கிறதுனாலதான் நிபா வைரசுக்கும் அந்த ஊர ரொம்ப பிடிச்சிருச்சு போல இருக்கு.

தற்போது கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவிவருகிறதாம். இது இப்படியே சென்றால் அது பெரிய ஆபத்தில் சென்று முடியும். அதனால் மத்திய அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும்.

உயிரைக்கொள்ளும் நிபா வைரஸ் தாக்கம் கேரளாவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதனை தடுப்பது குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.                நிபா வைரஸ் மீண்டும் கேரள மாநிலத்தை குறி வைத்து தாக்கியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கல்லுாரி மாணவர் ஒருவர் ‘நிபா’ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அந்த மாணவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், மாணவருக்கு ‘நிபா’ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

கேரளா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா இதனை உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து எர்ணாகுளம் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு என தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு மே மாதமும் நிபா வைரஸ் தாக்கம் கேரளாவில் ஏற்பட்டது. இதில் கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டது.

நிபா வைரஸ் வவ்வால்களால் பரவும் ஒரு வகை காய்ச்சல். மிகவும் ஆபத்தான இந்த வைரஸ் உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆபத்தான வைரஸ் என மருத்துவர்களால் கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலை தடுக்க எடுக்கவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

மேலும் கேரள அரசுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நிபா வைரஸ் தொடர்பாக கேரள அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று கூறியுள்ளார்.

6 பேர் கொண்ட குழுவை நிபா வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய  மத்திய அரசு கேரள மாநிலத்திற்கு அனுப்புகிறது. இந்த வைரஸ் பருவமழை துவங்குவதுற்குள் தடுக்கப்படவேண்டும்.

இந்த வைரஸ் தடுக்கப்படவில்லை என்றால் அதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்லும். இந்த வைரஸ் பிற மாவட்டங்களுக்கும் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here