இந்தியாவின் முக்கிய பௌலர் பும்ரா ஊக்கமருந்து பயன்படுத்தினாரா?… சோதனை செய்யப்பட்டு வருகிறது…

0
78

உலககோப்பை கிரிக்கெட் இந்த வருடம் சற்று கடினமாகத்தான் இருக்கும். அனைத்து அணிகளுமே செம்ம பார்மில் இருக்கினனர். இந்த நேரத்தில் பல சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் மிக மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி நேற்று இங்கிலாந்தை பந்தாடி வெற்றிபெற்றுள்ளனர். இன்னும் என்னென்ன மாற்றங்கள் நிகலப்போகுதோ?

இப்படி சென்றுகொண்டிருக்கையில் இந்தியாவிற்கு பந்துவீச்சில் தூணாக விளங்கும், அது மட்டுமில்லாமல் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக விளங்கும் பும்ரா ஊக்கமருந்து சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

        இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு திடீரென ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்திய ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.

உலக கோப்பை தொடரில், இந்திய அணி நாளை தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இந்திய வீரர்கள் சவுதாம்டனில் நாளை நடக்கும் இந்த போட்டிக்காக, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்ரிக்க அணி தோல்வியை சந்தித்துள்ளதால், இந்த போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.

இந்தியாவுடனான போட்டியில் வெற்றிபெறுவதற்காக தென் ஆப்பிரிக்கா அணி பல திட்டங்களை வைத்துள்ளதாக அந்த அணி தெரிவித்திருக்கிது. இந்நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று பும்ரா பயிற்சியில ஈடுபட்டிருந்த போது, அவரை மட்டும் ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் அழைத்துச் சென்றுள்ளனர். அதை மைதான அதிகாரிகள் உறுதி செய்திருக்கின்றனர்.

இந்த சோதனை மொத்தம் 2 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. முதலில், சிறுநீர் பரிசோதனையும், 45 நிமிடங்கள் கழித்து ரத்த பரிசோதனையும் பும்ராவிற்கு நடத்தப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து சோதனை முடிவு பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. வேறு எந்த வீரருக்கும் ஊக்கமருந்து சோதனை நடத்தப் பட்டதா என்ற விவரமும் அறிவிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் இந்த ஊக்க மருந்து சோதனையை, இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. பும்ரா ஊக்கமருந்து எடுத்திருக்க வாய்ப்பில்லை என அனைவரும் நம்புகின்றனர்.

திடீரென பும்ராவுக்கு மட்டும் ஏன் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட வேண்டும் என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏறபட்டுள்ளது. இதில் ஏதும் உள்குத்து உள்ளதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here