கிராமத்து உருண்டை மோர்க்குழம்பு..

0
69

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு – 200 கிராம்
மிளகாய் வற்றல் – 4
மிளகு – 4
இஞ்சி – சிறிதளவு
கடுகு, எண்ணெய் – அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – 1 ஸ்பூன்
மோர் – 2 கப்
தனியா – ஒரு ஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு கப்                                                                            கொத்தமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

  • முதலில் சிறிதளவு துவரம்பருப்பு, பச்சை மிளகாய், சீரகம், தனியா, இஞ்சி, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் ஊற வைத்து அரைத்து, மோர், உப்பு சேர்த்து கலக்கவும்.
  • பின்னர் துவரம்பருப்பை நன்றாக ஊற விடவும்.
  • இத்துடன் காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்து பிசையவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த பருப்பு கலவையை போட்டு கெட்டியாகக் கிளறவும்.
  • இதனை சிறிய உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து வேக விடவும்.
  • வாணலியில் மோர் கலவையுடன், வெந்த உருண்டைகளையும் போட்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்
  • சுவையான உருண்டை மோர் குழம்பு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here