லிசா திரைப்படம் விமர்சனம்

0
983

லிசா கேரக்டரில் வரும் அஞ்சலி இப்படத்தில் முழுமையான ரோலில் நடித்துள்ளார். படத்தின் அநேக காட்சிகளிலும் வரும் அவரையே இப்படத்தில் ஒரு பெரும் சம்பவம் புரட்டி போட, பேயாக மாறியிருக்கிறார். பேயாக மாறும் வேளையில் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டதோ என தோன்றலாம்.

படத்தில் பாய் ஃபிரண்டாக வரும் இளம் நடிகர் சாம் ஜோன்ஸ் அஞ்சலியுடன் தன் நடிப்பை ஈடுசெய்கிறார். யோகிபாபு படத்தின் சில காட்சிகள் உள்ளே புகுந்த சிரிப்பை வரவைத்துவிடுகிறார். அவர் அடிக்கும் கவுண்டர்கள் ரியல் லைஃபை பிரதிபலிக்கிறது.

அதே போல தெலுங்கு சினிமாவின் பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தம் வரும் காட்சிகள் காமெடிக்கு கியாரண்டி. அவருக்கு குரல் டப்பிங் பேசிய எம்.எஸ்.பாஸ்கர் அப்படியே ஒன்றிவிட்டார். பார்ப்பவர்களின் எனர்ஜி டவுனாகும் வேளையில் இவர்களின் காமெடி நமக்கு உற்சாகத்தை கூட்டுகிறது.

மலை வீட்டில் வாழும் மக்காரந்த் தேஸ்பாண்டே மிக முக்கிய கேரக்டரை பெற்றுள்ளார். இவர் விஞ்ஞானி போல தோன்றினாலும் விபரீதமாக செயல்படும் விதம் கொஞ்சம் சீரியஸ்னஸை கூட்டுகிறது.

அறிமுக இயக்குனர் ராஜு வசந்த்தின் 3D முயற்சிக்கு ஒரு நன்றி. வரவேற்கிறோம். ஆனால் இன்னும் பிளான் செய்திருந்தால் சூப்பரான பொழுதுபோக்காக படம் அமைந்திருக்கும். முதல் பாதி மிக நீளம். எப்போது முடியும் என தோன்ற வைக்கலாம்.

ஆனால் இரண்டாம் பாதியில் எதிர்பாராத வேளையில் அவர் வைக்கும் டிவிஸ்ட் கொஞ்சம் ஆர்வத்தை கூட்டுகிறது. முடியப்போகும் நேரத்தில் மேலும் ஃபிளாஷ் பேக் வருவது கொஞ்சம் பின்வாங்க வைக்கிறது.

ஆனால் அதிலும் ஒரு நல்ல மெசேஜ் சொல்ல முயற்சி செய்கிறார். ஒரு பேய் இருக்கும் போதே வேறொரு பேய்க்கான ஸ்டோரி ஓட எதையோ ஸ்கிப் ஆகி போன ஒரு ஃபீல்.

3D படத்திற்கான ஒளிப்பதிவு, எடிட்டிங் ஓகே. திடீரென வரும் பேய கை, கால்கள் நம்மை ஒரு நிமிடம் பதறவைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here