பல சிறப்பம்சங்களுடன் வரும் Redmi K20 மொபைல்

0
89

வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரெட்மி கே 20 ஸ்மார்ட்போன் வரும் 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி சீன நிறுவனமான சியோமி, இந்தாண்டு நோட் மற்றும் ப்ரோ வரிசையில் அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டு வருகிறது. பட்ஜெட் விலையில், அதிகப்படியான சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் என்பதால், சியோமியின் வாடிக்கையாளர்ள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், 48 மெகா பிக்சல் கேமரா, ஸ்நாப்டிராகன் 855 சிப் பிராசசர் அம்சங்களுடன் கூடிய ரெட்மி K20 ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இது எப்போது சந்தைக்கு வரும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அறிமுக தேதி குறித்த விபரங்கள் வெளி வந்துள்ளது.

அதன்படி பெய்ஜிங் நகரில் வரும் 28ம் தேதி மதியம் 2 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 11.30 மணி) ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் சோனி IMX 586 சென்சார் தொழில்நுட்பத்துடன் கூடிய, 48 மெகா பிக்சல் கேமரா உள்ளது. ட்ரிப்பிள் கேமரா செட்அப் பின்பக்கத்திலும், முன்பக்கத்தில் பாப் அப் செல்பி கேமரா இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் போகோ எப்2 மாடலின் மேம்படுத்துதலை ரெட்மி கே 20 ஸ்மார்ட்போன் முறியடிக்கும் வகையில் உள்ளது. இரண்ட வேரியண்டுக்களில் ரெட்மி கே 20 ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இணையதளங்களில் தகவல்கள் வந்துள்ளது.

இருப்பினும் அது உறுதி செய்யப்படவில்லை. விலை குறித்த விபரங்கள் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தப்பின் தான் தெரியவரும். எப்படி இருந்தாலும், பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here