சிதம்பரம் தொகுதியில் கடுமையான போட்டி…. வெற்றி யார் பக்கம் வரும் என்ற குழப்பம்….

0
57

இந்தியாவில் மக்களவை தேர்தல் 2019ஆம் ஆண்டு மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிந்து தற்போது வெற்றி அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த தேர்தல்களின் முடிவு இன்று (23.05.2019) இரவுக்குள் யாருக்கு வெற்றி என்று தெரிந்துவிடும். இதில் தற்போது முன்னிலையில் உள்ளவர்கள் அப்டேட்வருகிறது.

இந்த சமயத்தில் தற்போது வெளிவரும் தகவலின்படி தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவை தொகுதி போட்டியில் திராவிட முன்னேற்ற கழகம் தான் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.                திமுகவுடன் கூட்டணி வைத்து பானை சின்னத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார் திருமாவளவன். தற்போது சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் பின்னடைவில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திர சேகர் மீண்டும் முன்னிலையில் உள்ளார்.

சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திர சேகர் தொடக்கத்தில் முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே மிகக் குறைந்த வாக்கு எண்ணிக்கையில் திருமாவளவன் முன்னிலைக்கு வந்துவிட்டார்.

தற்போது மீண்டும் அதிமுக வேட்பாளர் சந்திர சேகர் சிறிய வாக்கு எண்ணிக்கையில் முன்னிலைக்கு வந்துள்ளார். இவர்கள் இருவரும் தான் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.

இந்த தொகுதி தான் சற்று அங்குமிங்குமாக சென்றுகொண்டிருக்கிறது. மற்ற இடங்களில் திமுக கணிசமான முன்னிலையில் உள்ளது. இந்த தொகுதி சற்று கெடுபிடியாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here