பட்ஜெட் ரேட்டில் புதிதாக கிடைக்கும் nokia 3.2 மொபைல்கள்

0
102

பட்ஜெட் விலைக்கு ஏற்றவாறு நோக்கியா நிறுவனம் 3.2 என்ற புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.எம்.டி குளோபல், நடுத்தர மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.26 இன்ச் டிஸ்ப்ளே, 4,000 mAh பேட்டரி உள்ளது. பேட்டரி இரண்டு நாட்கள் வரையில் சர்வ சாதரணமாக நிலைத்து நிற்கும் சக்தியுடையது. வரும் 23ம் தேதி முதல் இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் நோக்கியா ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஷோரூம்களில் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் விலை 8,990 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே வெர்ஷனில், 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 10,790 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு 2,500 ரூபாய் கேஷ்பேக் ஆஃபராக வழங்கப்படுகிறது. மொத்தம் 50 வவுச்சர்கள் வீதம் 50 ரூபாய் என 2,500 ரூபாயும் கேஷ்பேக்காக வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இதே போல், ஹெச்.டி.எப்.சி வங்கியின் கிரேடிட் கார்டு, டெபிட் கார்டு, இஎம்ஐ மூலம் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது. நோக்கியா ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள், LAUNCHGIFT என்ற ப்ரோகோட் பயன்படுத்தி ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கிப்ட் கார்டு பெற்றுக் கொள்ளலாம். இதனை பிற்காலத் தேவைக்காக பயன்படுத்த முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here