பிஎஸ்எல்வி ராக்கெட் லாஞ்ச் நேரடியாக பார்க்க முன்பதிவுகள் ஆரம்பம்

0
90

வரும் 22ம் தேதி பிஸ்எல்வி சி46 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதனை ஸ்ரீஹரிகோட்டா மையத்தில் இருந்து நேரடியாக பார்ப்பதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இஸ்ரோ இந்த ஆண்டு விண்ணில் செலுத்தும் 3வது ராக்கெட்டாக பிஎஸ்எல்வி சி46 (PSLV C46) இருக்கிறது. இதன் மூலம் எடுத்துச் செல்லப்படும் ரிசாட் 2பி (RISAT 2B) செயற்கைக்கோள் இஸ்ரோ வடிவமைப்பில் உருவானது. இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து வரும் 22ஆம் தேதி காலை 5.27 மணிக்கு ராக்கெட் ஏவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரேடார் தொழில்நுட்பத்தில் புவிப் பரப்பை படம் எடுக்க இந்த செயற்கைக்கோள் பயன்படும். இதன் அதிநவீன இமேஜிங் சாதனம் மூலம் புவியின் கீழ்ப்பரப்பில் உள்ளவற்றை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். இந்த செயற்கைக்கோள் 555 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் ராக்கெட் ஏவப்படும் காட்சியைப் பார்க்க சுமார் 5,000 பேர் வரை அமரக்கூடிய அந்த அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு ராக்கெட் ஏவப்படுவதற்கு 5 நாட்கள் முன்பு தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ராக்கெட் ஏவுதல் நிகழ்வை நேரடியாக பார்ப்பதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here