உங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று இல்லை

0
764

பெயிண்ட்

வீட்டிற்கு பெயிண்ட் அடித்தவுடன் மீதமிருக்கும் பெயிண்ட் அல்லது காலியான டப்பா போன்றவற்றை வீட்டிலேயே போட்டு வைத்திருப்போம். இந்த கேன்கள் VOC என்னும் நச்சு வாயுவை வெளியிடும். இது உங்கள் வீட்டிற்குள் உள்ளேயும், வெளியேயும் இருக்கும் காற்றின் தரத்தை பாதிக்கும், இதனால் மூச்சுக்கோளாறுகள் ஏற்படும். அதிகளவு VOC வாயு புற்றுநோயை கூட ஏற்படுத்தும்.

வீட்டை சுத்தம் செய்ய உதவும் பொருட்கள்

உங்கள் வீடு சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். ஆனால் அதற்கு நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் அதிகளவு VOC வாயுவை வெளியிடும். இதனால் ஏற்படும் தீமைகளை குறைக்க அதிக வாசனையில்லாஹ பொருட்களை பயன்படுத்தவும், மேலும் தண்ணீர், வினிகர் போன்ற சாதாரண பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும். இது உங்கள் வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தரத்தை பாதிக்காது.

மெழுகு பொருட்கள்

இதன் மணமும், சூழ்நிலையை ரம்மியமாக மாற்றலாம், ஆனால் இவை பல பிரச்சினைகளையும் சேர்த்தே வெளியிடுகிறது. இதில் இருக்கும் மூலக்கூறுகளும், துகள்களும் காற்றின் தரத்தை பாதிப்பதுடன் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

கிரானைட்

கிரானைட் கற்கள் இயற்கையாகவே ரேடான் என்னும் கதிரியக்க வாயுவை வெளியிடும். நுரையீரலை பாதிப்பதில் இதுதான் இரண்டாவது ஆபத்தான வாயுவாகும். ஆனால் வீட்டில் இருக்கும் கிரானைட் கற்கள் இதனை வெளியிடாது என்றார் ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் உடைந்த மற்றும் சிதைந்த கிரானைட் கற்கள் இதனை வெளியிடும். எனவே உடைந்த கிரானைட் கற்கள் இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here