மசாலா கடலை செய்முறை

0
70

தேவையானவை

  • முழு பொட்டுக்கடலை – 200 கிராம்
  • மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்
  • வெறும் வாணலியில் வறுத்த கறிவேப்பிலை – சிறிதளவு
  • எண்ணெய் – அரை டீஸ்பூன் சர்க்கரை,
  • உப்பு – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை

  1. அரை டீஸ்பூன் எண்ணெயில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

2. வெறும் வாணலியைச் சூடாக்கி முழு பொட்டுக்கடலையை அதில் போட்டு, கருகவிடாமல் கரண்டியால் கிளறிச் சூடாக்கவும்.

3. பின்னர் இதனுடன் எண்ணெயில் பிசிறிவைத்த மசாலா கலவை மற்றும் வறுத்த கறிவேப்பிலையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

4. லெஸ் ஆயில் ஸ்நாக் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here