இந்துக்கள் தீவிரவாதியாக வாய்ப்பில்லை…. மோடி கூறும் விளக்கத்தை பாருங்கள்….

0
66

கமல் ஹாசன் என்னவென்றால் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என்கிறார். அவர் அப்படி சொன்னதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாக்கை அறுப்பேன் என்று கண்டனம் தெரிவிக்கிறார்.

இப்படி குளறுபடிகள் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் நமது தற்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்துக்கள் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று ஒரு விளக்கம் தருகிறார்.

பிரதமர் மோடி கூறுவதன் மூலம் தீவிரவாதி என்றாலே அவர்கள் மற்ற மதத்தினர்தான் என்றும், எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என அவர் கூறி வருகிறார்.           தேர்தல் கிட்டத்தட்ட முடியப்போகிற நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். மோடி முதல் கமல்ஹாசன் என அனைவருமே சர்ச்சையாக பேசி வருகிறார்கள்.

மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசும் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என்றார். இதில் இவர் கூறிய முதல் கருத்து மட்டும் விவாதத்திற்குள்ளாகிவிட்டது.
கமல் பேசியது தென்னிந்தியா வரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தான் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலை திட்டினார்.
இந்து மகாசபை டெல்லி நீதிமன்றத்தில் கமல்ஹாசன் கருத்துக்கு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி
ஒரு விளக்கம் தந்துள்ளார்.
அவர் கூறுகையில், எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்றும், தீவிரவாதிகள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்க முடியாது என்றும் மொட்டையாக கூறியுள்ளார்.

இவர் கூறியுள்ள இந்த கருத்து இவருக்கு எதிரானதாக உள்ளது, ஏனென்றால் இவர் இந்து மதத்திற்கு மட்டும் ஆதரவாக பேசி மற்ற மதத்தினரை குறைகூறுவது போல பேசியுள்ளார்.

மோடியின் இந்த விளக்கத்தை சிலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் பலரும் இதற்கு எதிராகத்தான் உள்ளனர். இவர் இப்படி குறிப்பிட்டு கூறியது தவறான கருத்தாக கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here