நீங்கள் செவிலியரா… சவூதி அரேபியாவில் பல லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு…..

0
83

இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகளில் ஒரு முக்கியமான பிரச்சனை எதுவென்றால் வேலைவாய்ப்பு தான். அனைவருக்கும் வேலை எங்காவது இருக்கும் அதை நாம் தான் கண்டறியவேண்டும்.

அதனால் தான் நங்கள் உங்களுக்கு தேவையான தகவலை தந்து கொண்டிருக்கிறோம். தற்பொழுது செவிலியர்களுக்கு சவூதி அரேபியாவில் வேலை காத்துக்கொண்டிருக்கிறது.

அயலக வேலைவாய்ப்பு நிறுவனம் சவூதி அரேபியாவில் செவிலியராகப் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. அதற்கான நேர்முகத் தேர்வு விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.                     செவிலியர்களாக பணியாற்ற சவூதி அரேபியாவில் 35 வயதிற்குட்பட்ட பி.எஸ்சி. தேர்ச்சி பெற்ற ஆண்கள், பெண்களைச் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.

அந்த நேர்முகத்தேர்வு கேரள மாநிலம், கொச்சியில் வரும் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையில் நடைபெறும். இந்த நேர்முகத்தேர்வு சவூதி அரேபிய அமைச்சகத்தால் நடத்தப்பட உள்ளது.

ஐந்து வருடப் பணி அனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பம் செய்ய முடியும். இதில், தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.80,000 வரையில் வழங்கப்படும்.

விமான பயணச் சீட்டு, உணவு, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை, போக்குவரத்து, என அனைத்தும் இலவசம். மேலும்  35 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பும் நிச்சயம் உண்டு.

சவூதி அரேபிய அமைச்சகத்தின் சட்டதிட்டத்துக்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும். இப்பணியிடத்தில் சேர விருப்பமுள்ளவர்கள், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன்இணைக்கவேண்டும்.

தேவையானவை கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் ஆதார் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படம் போன்றஅனைத்தும்.

விண்ணப்பத்துடன் இணையத்தின் வழியாக பின்வரும் ovemclmohsa2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மே 17-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த கூடுதல் விபரங்களை அறிய www.omcmanpower.com என்னும் வலைத்தள முகவரியினையும் தொடர்பு கொள்ளலாம். 044-22505886 / 22502267 / 8220634389 என்ற தொலைபேசி எண்ணையும் அழைக்கலாம்.
இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் படி அரசாங்கத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இது ஒரு நல்ல வாய்ப்பு என்று பரிந்துரை செய்கின்றனர் பலர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here