தோனிக்கு பௌலிங்கை பற்றி ஒன்றும் தெரியாது…. விமர்சனம் செய்யும் குல்தீப் யாதவ்….

0
68

உலக கோப்பை 2019 தொடர் இந்த மாத முடிவில் ஆரம்பமாக உள்ள நிலையில் குல்தீப் யாதவ் தோனியை குறைகூறி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோனி கூறுகிற பந்து வீசும் பொது கூறுகிற ஆலோசனை அனைத்துமே தப்பு தான் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விமர்சித்துள்ளார். இது தான் அவர் சொன்ன விமர்சனம்.

இங்கிலாந்தில் வரும் 30ம் தேதி ஐசிசி உலக கோப்பை தொடர்  தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.                 என்னதான் தோனி கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், களத்தில் கோலிக்கும், மற்ற பந்து வீச்சாளர்களுக்கும் ஆலோசனை வழங்குவார். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்குஅறிவுரை வழங்குவார்.

அதாவது எவ்வாறு பந்து வீசுவது, விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது என்று பல அறிவுரைகளை அளிப்பார். அவர் சொன்னபடி பந்து வீசும் போது விக்கெட்டுகள் விழுந்துவிடும்.

அதை பெருமையாக நினைத்து, பல பந்து வீச்சாளர்கள் தோனியின் அறிவுரையால் தான் விக்கெட் வீழ்த்தியதாக தெரிவித்துள்ளனர். ஆனால் குல்தீப் யாதவ் அதற்கு மாறாக பேசியுள்ளார்.
முதல் முறையாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தோனி கூறும் ஆலோசனைகள் தவறாக முடிந்துவிடும். இது பற்றி அவரிடம் கேட்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குல்தீப், தோனி எனக்கு அளித்த டிப்ஸ் பெரும்பாலும் தப்பாகத் தான் முடிந்திருக்கிறது. அவர் சொல்வதுபோல் சில நேரங்களில் நடக்காது.
ஆனால் அதன் பின்னர் இது குறித்து தோனியிடம் சென்று நீங்கள் சொன்னது போலவே பந்துவீசினேன்; எதுவும் நடக்கவில்லையே என்று கேட்கக்கூட முடியாது. தோனி யாருடனும் அதிகம் பேசமாட்டார். தேவை ஏற்பட்டால் மட்டுமே வந்து பேசுவார்.
டோனி தன்னுடைய அனுபவத்தில் இப்படி செய்ய வேண்டும் என்று கூறியிருப்பார். அவைஎல்லாம் சரியாக நடக்கும் என்று கூறுவது சற்று கடினம் தான். அது அவருடைய தவறில்லை.

அது போல இவர்கள் இரவருமே உலககோப்பையில் விளையாடவுள்ளனர். இந்த சமயத்தில் இது போன்று பேசுவது என்பது நிச்சயம் பல குழப்பங்களை ஏற்படுத்தும். இது நீங்க வேண்டும்.

மேலும் குல்தீப் யாதவ் கூறிய இந்த அறிவிப்பிற்கு பல எதிர்ப்புகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதனால் குல்தீப் யாதவின் பெயர் பல இடங்களில் அடி படும் என்பதுதான் மிச்சம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here