செந்தில் பாலாஜி ஏன் மோடிக்கு மண்டியிட வேண்டும்…. காங்கிரஸ் ஜோதிமணி பளீர் விளக்கம்….

0
56

தமிழகத்தில் இருக்கும் 22 காலி தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் முடிவுபெற்ற நிலையில். தற்போது மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடைபெற உள்ளது.

அதில் அரவக்குறிச்சி தொகுதி மிகவும் அதிக பரபரப்பாக இருக்கிறது. அங்கு பிரச்சாரமும் மிக தீவிரமாகவும் இருக்கிறது. அதனால் அங்கு பல பரபரப்பான பிரச்சார உரைகளும் எழுகின்றன.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் செல்வி ஜோதிமணி அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பரப்புரையில் மோடியிடம் மண்டியிட்டு அடிமையாக இருக்கும் அரசாங்கம்தான் தமிழக அரசு என பேசியுள்ளார்.                  திமுக சார்பாக அரவகுரிசியில் போட்டியிடும் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து கரூர் பரமத்தி ஒன்றியம் அத்திப்பாளையம் மற்றும் நடந்தை ஆகிய ஊராட்சிகளில் ஜோதிமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் பேசிய அவர் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்தோம் என்பதை மக்களிடம் விளக்கி ஓட்டு கேட்க வேண்டும் அல்லது அடுத்த 5 ஆண்டுகளில் என்ன செய்ய இருக்கிறோம் என்பதைச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்.
ஆனால் அதை செய்யாமல் அடுத்தவர்களை குறை கூறியும், மற்றவர்களை தனிப்பட்ட முறையில் திட்டுவதும் பிரச்சாரம் இல்லை என்றார். இங்கே தீர்க்கப்படாமல் இருக்கிற பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும்.
செந்தில் பாலாஜி கட்சி விட்டு கட்சி தாவி ஓட்டு கேட்கிறார் என்ற கேள்விகள் அதிகம் எழுந்தன. அதற்கான ஒரு பளீர் விளக்கத்தை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி கூறியுள்ளார்.

தமிழகத்தின் நலனுக்கு எதிராக ஜிஎஸ்டி , நீட் தேர்வு , ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றை ஓபிஎஸ்- எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் மோடியுடன் சேர்ந்து அனுமதித்து விட்டனர்.
அதனோடு நிறுத்திக்கொள்ளாமல், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலிலதா ஆகியோர் பாஜகவில் இணைவதை கடுமையாக எதிர்த்தும் தற்போது அதிமுக அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளது.

மோடியிடம் மண்டியிட்டு அடிமையாக இருக்கும் அரசாங்கம்தான் இது.ஏற்கெனவே 10 பேர் அவர்களுடன் அடிமையாக இருக்கும்போது 11 வது நபராக செந்தில் பாலாஜி இருக்க முடியாமல்கட்சி மாறி இருக்கிறார்.
அவர் கூறிய இந்த உரை பலருக்கும் அதிர்ச்சியை அளித்தத்து. ஆனால் அவர் கூறுவதில் பல உண்மைகள் இருப்பதாகவே தெரிகிறது. இதனால் அதிமுகவின் பலவீனம் வெளிவருகிறது.

அதிமுக பாஜக கூட்டணி என்பது அனைவருமே எதிர்பார்க்காத ஒன்று தான் என்பதே உண்மை. ஆனால் இது தான் செந்தில் பாலாஜியின் கட்சி தாவலுக்கு காரணமா?….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here