கீ திரைப்படம் விமர்சனம்

0
70

ஜீவா வழக்கம் போல அவரது பங்கை சிறப்பாக கொடுத்திருந்தாலும் கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் போனதால் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. நல்ல கதையாக இருந்தாலும் அதை படமாக்குவதில் கோட்டை விட்டுவிட்டார் இயக்குனர்.

நிக்கி கல்ராணி தனக்கு கொடுத்த ரோலை கச்சிதமாக நடித்து முடித்துள்ளார். அனைக்கா சோடியை வெறும் கவர்ச்சிகாக மட்டுமே பயன்படுத்தியுள்ளார் இயக்குனர்.

படம் முழுவதும் ஹேக்கிங் பற்றி திரையில் காட்டப்பட்டது எதுவும் அழுத்தமாக இல்லாதது பெரிய மைனஸ். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை வில்லன் செய்யும் பல விஷயங்கள் நம்பவே முடியாத அளவுக்கு தான் இருந்தது. செல்போன், வெப்கேம், ஏடிஎம், கம்ப்யூட்டர், கார், பேஸ் மேக்கர் என அனைத்தையும் நொடிப்பொழுதில் ஹேக் செய்துவிடுகிறார்.

ஹேக்கிங் செய்பவர்கள் அனைவரும் ஒரு 100 இன்ச் ஸ்க்ரீன் முன்பு அமர்ந்து தான் அனைத்தையும் செய்வார்கள் என்பது போல காட்டப்பட்டிருப்பது டூ மச்.

மேலும் படத்தின் கதையோட்டத்திற்கு பெரிய தடையாக இருந்தது ஜீவா மற்றும் அவரது அப்பா இடையேயான செண்டிமெண்ட் காட்சிகள் தான்.

ஆர்ஜே பாலாஜி செய்த காமெடி ஒரு சில மட்டுமே சிரிப்பூட்டியது. படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் தர்மகோல் மினிஸ்டர் முதல் விஜய் மல்லையா வரை அவர் பேசும் வசனங்களை தவிர்த்திருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here