கமலஹாசனின் நாக்கை அறுத்து விடுவேன்…. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு….

0
57

இந்தியாவில் மக்களவை தேர்தல் மிக விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் இந்த நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் இடைத்தேர்தல் தீவிரம் அடைந்துள்ளது. பல பிரச்சாரமும் நடைபெறுகிறது.

தற்போது கமல் ஹாசன் கட்சியிலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுசெயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார்.                     மேலும் நாதுராம் கோட்சே என்பவர் தான் அந்த நபர் என்று சுட்டிக்காட்டினார். இங்கு முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை என்றார் கமல்.

அரசியல் கட்சியினர் பலரும் இந்துக்களை தீவிரவாதி என கமல் கூறியதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ஒரு விஷயத்தைபேசினார்.

                      இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தப்போது சிறுபான்மையின வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்றார்.
                      யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை கூறி அந்நிய சக்திகளுக்காக பேசி வரும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனகேட்டுக் கொண்டார்.

                      இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நீதி மையத்தின் பொதுசெயலாளர் அருணாசலம் ராஜேந்திர பாலாஜி தனது பதிவியிலிருந்து விலக வேண்டும் என்று ஒரு கண்டன அறிவிப்பை வழங்கியுள்ளது.
                       மக்கள் அனைவரும் இவர்கள் இருவரும் பேசிய இரண்டு வார்த்தைகள் அனைத்துமே கண்டிக்கத்தக்கவை என்று நினைக்கிறார்கள். ஆனால் இருவரும் கொஞ்சம் குறைத்து பேசவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here