ஈரான் மீது போர்தொடுக்க தயாராகும் அமெரிக்கா…. 1.20 லட்சம் இராணுவத்தினர் அனுப்பிவைப்பு…

0
70

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இருக்கும் பகை, மற்றும் பதட்டம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இது தற்போது மிகவும் தீவிரம் அடைந்துள்ளது என்பது தான் செய்தி.

தற்போது அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக 1,20,000 போர் படைகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப முடிவெடுத்து உள்ளது. இது போர்உருவாகும் சூழலை ஏற்படுத்துகிறது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகலாம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா ஏற்கனவே பொருளாதாரதடை விதித்துள்ளது.                   இந்த நிலையில் தற்போது போர் படைகளை அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈரான் அமெரிக்காவிற்கு இடையில் நிகழும் பிரச்சனைகள் பல உள்ளன. ஈரானிடம் இருந்து உலக நாடுகள் எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தடை செய்தது.

நேற்று சவுதி, அமீரகம் ஆகிய நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மர்மமான முறையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் தாக்குதலுக்கு உள்ளது. இதற்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இதனால் கோபப்பட்ட ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக அறிவித்தது. 2015ல் ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. சென்ற வருடம் மட்டும் 2 பொருளாதார தடைகளை விதித்தது.

கடந்த வாரம் ஈரான் மீது அமெரிக்கா 3 வது பொருளாதார தடையை விதித்தது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியேதான் மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் வர்த்தகம் செய்கிறது.

தற்போது அமெரிக்கா தனது 1 லட்சத்து 20 ஆயிரம் ராணுவ படைகளை அனுப்பியுள்ளதால் நிச்சயம் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பதட்டாமான சூழ்நிலை நிலவுகிறது.

அமெரிக்கா தற்போது போரை ஏற்படுத்துமா அல்லது ஈரானை பயமுறுத்த இது போன்று செய்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் எதோ ஒன்று நடக்க இருப்பது உண்மை தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here