அத்தை-மருமகன் ஊழல் அரசாங்கத்தை ஒழிக்க வேண்டும்…. அமித் ஷா பதிலடி….

0
81

மேற்கு வங்கத்தில் பாஜகவ அல்லது மம்தாவா என்ற பெரிய போட்டி நிலவுகிறது. இந்த வருட தேர்தல் மேற்குவங்கத்தில் மிகவும் பரபரப்பாக செல்கிறது. பிரச்சாரங்கள் சூடுபிடிக்கிறது.

அங்கு மம்தா தனது பிரச்சாரங்களில் மோடியையும், பாஜகவையும் சாடி பேசிக்கொண்டிருக்கின்றார். அதேபோல் பாஜகவினரும் மம்தாவை சாடியே பேசி வருவது தான் நிலைமை.

மேற்கு வங்கத்தில் பாஜகவினர் பங்கேற்கும் பிரச்சார கூட்டத்திற்கு தடை விதித்தாலும்,பாஜகவின் வெற்றியை தடுக்க முடியாது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறினார்.                 7 வது கட்ட தேர்தல் வருகிற ஞாயிற்று கிழமை நடைபெற உள்ளது.இந்த தேர்தல் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள, ஒன்பது மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

ஜாதவ்பூரில் அமித்ஷா கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜாய்நகர் தொகுதியில் கேனிங் என்ற இடத்தில் நடந்த மற்றொரு பிரச்சார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

மம்தா பானர்ஜி அரசு குழப்பத்தில் இருக்கிறது. என்னை கூட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுக்கலாம் ஆனால் எனது வெற்றியை அவர்களால் தடுக்க முடியாது என்றுள்ளார்.

இதற்கு முன்னர் சிண்டிகேட் வரி இருந்தது. தற்போது, மருமகன் வரியாக மாறிவிட்டது. இந்த அத்தை-மருமகன் ஊழல் அரசை நாம் தூக்கி எறிய வேண்டும் என்று பேசியுள்ளார் அமித் ஷா.
வங்காளதேசத்தில் இருந்து இங்கு ஊடுருவியவர்கள் கரையான் போன்றவர்கள். நாட்டின் வளங்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அவர்களை வெளியேற்றுவோம் என்றார்.

ஜாதவ்பூரில் கூட்டத்துக்கு போதிய ஆட்கள் வரமாட்டார்கள் என்ற அச்சத்தில்தான் பா.ஜனதாவே ரத்து செய்து விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்த்தா சாட்டர்ஜிகூறியுள்ளார்.

தேர்தல் நெருங்கிகொண்டிருப்பதால் அங்கு இது போன்ற பல உரைகள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் மக்கள் அதையெல்லாம் நம்பாமல் வாக்கினை சரியாக அளிக்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here