சாய் பிரசன்னா டிரஸ்ட்டில் இருந்து மக்களுக்கு நீர், மோர் வழங்கினார் நடிகர் விவேக்….

0
73

தமிழ் சினிமா துறையில் நடிகர் விவேக் ஒரு முக்கிய இடம் வகிப்பவர். அவரது படத்தில் வரும் நகைச்சுவைகள் அனைத்தும் சிரிக்கவும் சிந்திக்க்கவுமாக இருக்கும். அவர் பத்துன ஒருஅப்டேட்.

நடிகர் விவேக் மகன் ஏற்கனவே இறந்துவிட்டான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. அவரது மகன் பெயரில் சாய் பிரச்சனா என்ற டிரஸ்ட்டை ஆரம்பித்தார்.

அவரது சாய் பிரசன்னா டிரஸ்ட் பலஉதவிகளை செய்கிறது. கடந்த மூணு வருஷமா இந்தடிரஸ்ட் மூலம் பல நலத்திட்டங்களை செய்து வந்தாலும் மரம் நடுவது என்பது இதன் தலையாயபணி.                 அவர், சிங்கம் படத்துல நான் ஒரு வசனம்பேசி இருப்பேன்…வெயில் சுடும், அனல் காத்தா வீசும்ன்னு சொல்லுவாங்க..ஆனா, தூத்துக்குடியில மட்டும் வெயில் தீயா பத்திக்கும்னு.அது மாதிரிதான் இப்போ எல்லா இடத்துலயும் வெயில் தீயா பத்திக்குது.
என் மகன் பிரசன்னா நினைவாக கடந்த மூணு வருஷமா வெயில் காலத்தில் என்னால முடிஞ்ச இடங்களில் மோர் பந்தல் வச்சுக்கிட்டு வரேன். இந்த வருஷமும் வச்சிருக்கிறேன் என்றார்.
அங்கு பேசிய அவர், நாம விழிச்சுகிட்டு இன்னும் நிறைய மரங்கள் நட தொடங்க வேண்டிய காலக்கட்டம் இது. இல்லேன்னா அடுத்த வருஷமும் வெயிலில் நாம் வாடவேண்டியதான்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படங்களை வெளியிட்டுள்ளார். அவர் தனது மகன் நினைவிற்காக இதனையெல்லாம் செய்கிறார். அங்கு நடிகர் மயில் சாமியும் வந்தார்.

விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் அங்கு வந்த மயில்சாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். அவர் இது போன்ற உதவிகளை மேலும் மேலும் தொடர அனைவருடைய வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here